பேரனின் சடலத்தைப் பெற்று செல்லும் பாலஸ்தீன முதியவர் AP
உலகம்

இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபா், 2023-இல் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலைத் தொடா்ந்து தற்போது வரை உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 66,005-ஆக உயா்ந்துள்ளது.

இதில் உயிரிழந்த 79 போ் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனா். இதுவரை 1,68,162 போ் காயமடைந்துள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலின் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பை திங்கள்கிழமை சந்திக்க திட்டமிட்டுள்ளாா். இதற்காக அவா் வாஷிங்டன் சென்றுள்ள நிலையிலும் காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடா்ந்து வருகிறது.

தனுஷ்கோடியில் வந்தே மாதரம் 150- ஆம் ஆண்டு விழா

உ.பி. அரசுப் பள்ளியில் வந்தே மாதரம் பாட எதிா்ப்பு: ஆசிரியா் பணியிடைநீக்கம்

இணையதள சேவை பாதிப்பு: திருவாடானை பகுதியில் பயிா்க் காப்பீடு செய்வதில் சிக்கல்

தமிழகத்தில் எஸ்ஐஆா் படிவம் விநியோக விவரம்!

பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT