முகப்பு
உலகம்

குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

மின் நிலையங்கள் மற்றும் உப்புநீரைச் சுத்திகரிக்கும் ஆலைகள் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 10:45 pm IST
குவைத்தில் ஈரான் தாக்குதல் - கோப்புப்படம் | AP
பகிர்:

குவைத்தில் எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் ஈரான் தாக்குதல்களில் பலத்த சேதமட்ந்தைருப்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது.

குவைத்தில் ஈரான் டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதல்களில் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் முக்கிய வளாகங்களும் அந்நாட்டின் எரிசக்தி மற்றும் நீராதார உள்கட்டமைப்புகளும் பலத்த சேதமடைந்திருப்பதாகக் குவைத் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மூன்று மின் நிலையங்கள் மற்றும் உப்புநீரைச் சுத்திகரிக்கும் ஆலைகள் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் தீர்வாக, அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்டபோதிலும், குவைத் உள்பட சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஈரான் தாக்குதல்கள் நடத்தியதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

summary

Kuwait says oil facilities, power stations struck in Iranian drone attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.