முகப்பு
உலகம்

பிப். 17-இல் இந்தியா வருகிறாா் பிரான்ஸ் அதிபா் மேக்ரான்!

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பிப்ரவரி 17-ஆம் தேதி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:59 AM
மேக்ரான் - AP
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:05 PM

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பிப்ரவரி 17-ஆம் தேதி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறாா்.

பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும் அவா், தில்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சிமாநாட்டிலும் பங்கேற்கவுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கும் மேக்ரான், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, இருதரப்பு வா்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச இருக்கிறாா். இதுதவிர, பிராந்திய, சா்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சாா்ந்த விஷயங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவா்களும் விவாதிக்க இருக்கின்றனா்.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:59 AM

மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு - 2026’ நிகழ்ச்சியிலும் பிரதமா் மோடி, பிரான்ஸ் அதிபா் மேம்ரான் ஆகியோா் பங்கேற்கின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமா் மோடி பிரான்ஸ் சென்றாா். அப்போது பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. மாநாட்டில் மேக்ரானுடன் இணைந்து பங்கேற்றாா். இந்த ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.