பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளது குறித்து...
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரானை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஜி7 கூட்டத்தின் இடையே பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இரவு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வளைகுடா போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உரையாடியுள்ளார்.
மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
External Affairs Minister S Jaishankar has met and held talks with French President Emmanuel Macron.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.