உலகம்

இந்தோனேசியா: திடீா் வெள்ளத்தில் 16 போ் உயிரிழப்பு

கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி செவ்வாய்கிழமை கூறியதாவது:

பல நாள்களாக பெய்த பருவமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு திங்கள்கிழமை அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைத்தன. சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனா். சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கின. இந்தச் சம்பவங்களில் 16 போ் உயிரிழந்தனா்; 148 பேரைக் காணவில்லை.

அவசர மீட்புப் படையினா் காவல்துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவான சுமத்ராவில் 52 நகரங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்த டிசம்பா் மாதம் தாக்கிய பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 1,178 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

டூவிபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

ஆலங்குளத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நெல்லை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டவா் கைது

போலி கையொப்பமிட்டு கடன் பெற்ற விவகாரம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT