இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 500 சதவிகித வரிவிதிப்பு தொடர்பான வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
உக்ரைன் மீது தொடர்ந்து போர்த் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இந்தியா, சீனாவுக்கு பெரும் பாதிப்பு நிலை உருவாகியுள்ளது.
‘ரஷியா பொருளாதார தடைச் சட்டம் 2025’ என்ற பெயரிலான இந்த மசோதா மசோதா மீது நாடாளுமன்றத்தில் அடுத்த வார தொடக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கும் நிலையில், மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்தார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிபா் டிரம்ப் ஏற்கெனவே 50 சதவீத வரியை விதித்ததன் காரணமாக, இந்தியாவில் ஜவுளித் துறை உள்பட பல்வேறு துறைகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில், 500 சதவிகித வரிவிதிப்பு மசோதாவுக்கு அமெரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இந்த வரிவிதிப்பு நடவடிக்கையை சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் என்று குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப்புக்கு இறக்குமதிக்கான வரிகளை விதிக்க எந்த அங்கீகாரம் இல்லை என்றும், வரிகளை விதிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் கீழ் அமெரிக்க காங்கிரஸிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி, இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்புக்கான புதிய தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், ஜனவரி 26 அல்லது பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திக்கவைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.