இந்தோனேசியாவில் ‘குரோக்’குக்குத் தடை
குரோக் இணையதளத்துக்கும், அதன் செயலிக்கும் இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான குரோக் இணையதளத்துக்கும், அதன் செயலிக்கும் இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிக் காட்டுவது போன்ற குரோக்கின் உள்ளடக்கங்கள் இந்தோனேசியாவின் சட்டங்கள் மற்றும் கலாச்சார மாண்புகளுக்கும் எதிராகவும் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜன. 9) முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் தடையை அனைத்து இணைய சேவை நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.