ஈரானில் தீவிரமடையும் போராட்டம் எதிரொலியாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையைக் கண்டித்து நாடெங்கிலும் தீவிரமடைந்துள்ள போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. 2-ஆவது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது.
ஈரானில் பதற்றமான சூழல் நிலவுவதையடுத்து, அங்குள்ள அனைத்து இந்திய குடிமக்கள், மாணவர்கள், புனித யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விமானம் அல்லது சாலை மார்க்கமாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ ஈரான் எல்லையிலிருந்து வெளியேற ஈரானிலுள்ள இந்திய தூதரகம் இன்று(ஜன. 14) வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.