அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டது குறித்து...
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக்கிழமை (பிப். 28) நடத்திய தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால், பெரும்பாலான நாடுகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இத்துடன், ஈரானின் மினாப் நகரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டது உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியது.
கொல்லப்பட்ட சிறுமிகளின் இறுதிச் சடங்கிற்காகத் தோண்டப்பட்ட குழிகளின் புகைப்படத்தை ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாக, ஈரானின் ரெட் கிரெசண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.
787 people have been killed so far in the attacks by US and Israeli forces on Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.