FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்கா உடன் நீடிக்கும் போர்! ஈரானில் இறுதித் தேர்வுகள் ரத்து!

அமெரிக்கா உடனான போரால் ஈரானில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன...

Updated On : 18 ஜூலை 2026, 3:45 pm IST
அமெரிக்கா உடனான போரால் ஈரானில் தேர்வுகள் ரத்து... - கோப்புப் படம் | AP
பகிர்:

அமெரிக்கா உடனான போர் நீடிப்பதால் ஈரான் நாட்டின் 4 மாகாணங்களில் இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வெடித்த போரானது கடந்த ஜூன் மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை அருகில் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

Advertisement

Advertisement

இதனால், இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன. ஈரானின் முக்கிய தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் தெற்கு மாகாணங்களான ஹோர்மோஸ்கான், புஷெர், குஸெஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் வரும் ஜூலை 19 மற்றும் ஜூலை 20 ஆகிய 2 நாள்களில் நடைபெறவிருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, ஈரானின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 9 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

It has been announced that final examinations have been cancelled in four Iranian provinces due to the ongoing conflict with the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments