ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றுவதும் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சஃப்வத் என்கிற இருவர் ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அவர்கள் கைது செய்யப்பட்டது பற்றியோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பற்றியோ எதிலும் குறிப்பிடவில்லை. ஆனால், அவர்கள் இஸ்ரேலுக்கு ஒத்துழைத்து ரகசிய தகவல்களை அளித்ததாகக் குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் தரவுகளின்படி, சீனாவிற்கு அடுத்ததாக உலகில் அதிக மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது.
ஈரானில் கடந்தாண்டு மட்டுமே 1,639 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1989-க்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும்.
சில நாள்களுக்கு முன்பு, அரசுக்கு எதிரான போராட்டத்தில் கடந்தாண்டு அதிகாரிகளை தீயிட்டு கொளுத்திய இருவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Two people sentenced to death in Iran for spying for Israel!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.