ஜப்பான் பிரதமர் படம் - பிடிஐ
உலகம்

ஜப்பான் நாடாளுமன்றத்தை பதவியேற்ற மூன்றே மாதத்தில் கலைத்த பிரதமர்!

ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 104-ஆவது பிரதமராகவும் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளர்.

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபாவுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனிடையே, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணியில் இருந்த கௌ மேட்டோ கட்சி, தனது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதன்காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது.

ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்த நிலையில், சனே தகாய்ச்சி முதல் பெண் பிரதமராக கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் வழக்கமான கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையைக் கலைப்பதாக தகாய்ச்சி அறிவித்தார்.

தற்போதைய ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 2028 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், வருகின்ற பிப். 8 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தனது தலைமைக்கு மக்களின் நேரடி ஆதரவு இன்னும் கிடைக்காததால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The first female prime minister dissolved the Japanese parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரும் கரடிகளின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 770 புள்ளிகளுடன், நிஃப்டி 241 புள்ளிகளுடன் நிறைவு!

தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவி: பிரதமர் மோடி!

59 வயதா? நதியா புகைப்படங்களுக்குக் குவியும் வாழ்த்துகள்!

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டப்பேரவையில் பதற்றம்: நயினார் நாகேந்திரன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT