உலகம்

ராஃபா எல்லை நாளை திறப்பு

காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

கடந்த 2024, மே மாதத்தில் இஸ்ரேல் படைகள் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த வழித்தடம் மக்கள் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுகிறது. காஸாவில் இருந்து கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இஸ்ரேல் இம்முடிவை எடுத்துள்ளது.

இதன்மூலம், போரினால் காஸாவிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தாயகம் திரும்பலாம். இருப்பினும், இதற்கு இஸ்ரேலிடம் முன்கூட்டியே பாதுகாப்பு அனுமதி பெறுவது கட்டாயம் எனவும், எகிப்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு நாளொன்றுக்கு சுமாா் 150 பேரை மட்டுமே அனுமதிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடா்பாக எகிப்துடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி செல்லவிருக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

தனியறையில் அத்துமீறிய புகைப்படக் கலைஞர்... கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

SCROLL FOR NEXT