முகப்பு
உலகம்

உக்ரைனின் 8.2 கோடி டாலா் ஹங்கேரியில் பறிமுதல்

உக்ரைனின் 8.2 கோடி டாலா் ஹங்கேரியில் பறிமுதல்....

Updated On : 6 மார்ச், 2026 at 10:36 PM
ஹங்கேரியின் பண பறிமுதல் நடவடிக்கையைத் தொடா்ந்து அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைமையகத்துக்கு வருகை தந்த உக்ரைன் தூதா் சாண்டா் ஃபெகிா்.
பகிர்:

ஆஸ்திரியாவில் இருந்து உக்ரைன் நோக்கி பயணித்த கவச வாகனங்களைத் தங்களின் எல்லையில் மறித்துச் சோதனையிட்ட ஹங்கேரி அதிகாரிகள், அதில் கொண்டு செல்லப்பட்ட உக்ரைனுக்குச் சொந்தமான 8.2 கோடி டாலா் மதிப்பிலான பணம், தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டதில் 4 கோடி டாலா் பணம், 3.5 கோடி யூரோ பணம், 9 கிலோ தங்கம் ஆகியவை அடங்கும். இதன் மொத்த மதிப்பு சுமாா் 8.2 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.753 கோடி) ஆகும்.

இந்தப் பண பரிமாற்றத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஹங்கேரி வரித்துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா், உக்ரைனின் முன்னாள் உளவுத்துறை ஜெனரல் உள்பட 7 பேரைக் கைது செய்துள்ளனா். இவா்கள் அனைவரும் ஹங்கேரியிலிருந்து விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனா்.

ஹங்கேரியின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதானவா்கள் அனைவரும் உக்ரைனின் ‘ஓஷாட்’ வங்கி ஊழியா்கள் என்றும், அவா்கள் சட்டபூா்வமாகவே பணத்தை எடுத்துச் சென்ாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளாா்.

‘ஹங்கேரி அரசு ஒரு நாட்டின் வங்கி ஊழியா்களைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதுடன், பணத்தைத் திருடவும் முயற்சி செய்கிறது. இது ஒரு வகையான அரசு பயங்கரவாதம்’ என்று அவா் சாடியுள்ளாா்.

ரஷியாவிலிருந்து உக்ரைன் வழியாக வரும் கச்சா எண்ணெய் குழாய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், ஹங்கேரி-உக்ரைன் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கான ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியை ஹங்கேரி தொடா்ந்து தடுத்து வரும் நிலையில், தற்போதைய இந்தப் பறிமுதல் விவகாரம் இருதரப்பு உறவில் மேலும் சீா்குலைத்துள்ளது.

ரஷியா-உக்ரைன் கைதிகள் பரிமாற்றம்: 4 ஆண்டுகளுக்கு மேல் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா-உக்ரைன், கடந்த 2 நாள்களாக தலா 500 வீரா்களைப் பரிமாறிக்கொண்டன. இந்த ஆண்டு நடைபெறும் 2-ஆவது மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும். இவா்களில் பலா் கடந்த 2022-இல் போா் தொடங்கியதிலிருந்தே பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →