போர் எதிரொலி! விமான சேவை குறைப்பு!
பாரசீக வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக விமான சேவை குறைக்கப்பட்டது குறித்து...
பாரசீக வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கிய நாள் முதலே வான்வழிப் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
Advertisement
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விமான அட்டவணைகளைத் திருத்தி குறைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட குறைந்த அளவிலான விமானங்கள் அபுதாபி, துபை, ராக், ஷார்ஜா, புஜைரா மற்றும் இந்தியா இடையே மட்டுமே இயக்கப்படும்.
மேலும், விமானம் கிடைப்பது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனம் இன்று இயக்கப்பட இருந்த பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.