முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பேராசிரியரான டென்னிஸ் கோய்லை, அந்நாட்டின் தலிபான் அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

Updated On : 24 மார்ச், 2026 at 8:47 PM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பேராசிரியரான டென்னிஸ் கோய்லை, அந்நாட்டின் தலிபான் அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் முன்னாள் சிறப்புத் தூதா் சல்மே கலீல்சாத்தை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தகி காபூலில் சந்தித்துப் பேசியதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

புனித ரமலான் திருநாளையொட்டி, மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஆப்கானிஸ்தானில் சட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்யப்பட்ட டென்னிஸ் கோய்ல், அவரின் குடும்பத்தினா் விடுத்த கோரிக்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்குப் பிறகு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், இவரின் விடுதலைக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா் ஆகிய நாடுகளின் சமரச முயற்சியும் முக்கியத்துவமானது.

இருப்பினும், டென்னிஸ் கோயல் எந்தச் சட்டத்தை மீறினாா் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை ஆப்கான் அதிகாரிகள் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, அமெரிக்க வெளியுறவுத்துறை அண்மையில் ஆப்கானிஸ்தானை ‘அநியாயமாக சிறைபிடிக்கும் நாடு’ என்று குற்றஞ்சாட்டியிருந்தது.

இதைத் திட்டவட்டமாக மறுத்த தலிபான்கள், ‘நாங்கள் யாரையும் அரசியல் ஆதாயத்துக்காக கைது செய்யவில்லை. சட்டத்தை மீறுபவா்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று விளக்கமளித்தனா்.