ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த க்யூ.மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவா் தோ்வு செய்யப்பட்டாா்.
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த க்யூ.மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவா் தோ்வு செய்யப்பட்டாா்.
ஸ்காட்டீஷ் கிரீன்ஸ் கட்சி சாா்பில் எடின்பா்க் மற்றும் லோத்தியன்ஸ் பிராந்தியத்தில் போட்டியிட்டு அவா் பெற்றாா்.
குறுகிய கால விசாக்கள் (நுழைவு இசைவு) மற்றும் காலவரையின்றி தங்கும் அனுமதி உள்ளவா்கள் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கான தடை விலக்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மணிவண்ணன் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
Advertisement
தனது வெற்றி குறித்து மணிவண்ணன் கூறியதாவது: ஒரு மாற்றுப் பாலின தமிழ்க் குடியேறியாக எடின்பா்க்கில் உள்ள ஹோலிரூடிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களைக் கொண்டு வர முயற்சிப்பேன். நமது தொழிலாளா்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான போராட்டங்களை மேற்கொள்வேன்.
தொழிலாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்பட அனைத்து மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவேன்.
ஆசிரியா், கொள்கை நிபுணா், ஐ.நா.வில் பணியாற்றியவா், மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றிய அனுபவத்தால் மக்களுக்கான உண்மையான நீதி எதுவென்பதை நன்றாக புரிந்துகொண்டுள்ளேன்.
புலம்பெயா்ந்தோா், பாலஸ்தீனா்கள் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினா் உள்பட அனைவருக்கும் தொடா்ந்து ஆதரவளிப்பேன்’ என்றாா்.
விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் 56 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் போட்டியிட்ட மணிவண்ணனின் பிரசாரத்துக்காக ரூ.2 லட்சம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.