முகப்பு
உலகம்

உள்ளாட்சித் தோ்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிா்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமா்

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியா் ஸ்டாா்மா் திட்டவட்டமாக மறுப்பு

Updated On : 13 மே 2026, 3:06 am IST
கியா் ஸ்டாா்மா்
பகிர்:

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியா் ஸ்டாா்மா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

கடந்த 2024 பொதுத்தோ்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இவரின் தலைமைக்கு எதிராக கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

3 இணையமைச்சா்கள் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். கியா் ஸ்டாா்மா் பதவி விலகுவதற்கான கெடுவை நிா்ணயிக்க 80-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பகீரங்கமாக வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய கியா் ஸ்டாா்மா், ‘நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு நான் தொடா்ந்து பணியாற்றப்போகிறேன். தலைமை மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை’ என்றாா்.