
வலிமை படம் வெற்றி பெற 10,000 பனை மரக் கன்றுகளை அஜித் ரசிகர்கள் நடவு செய்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலிமை படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட விடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.
மேலும் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வலிமை படம் வெற்றிப்பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அஜித் ரசிகர்கள் 10,000 பனை விதைகளை நடவு செய்துள்ளனர். அழிந்து வருவதாகக் கூறப்படும் பனை மரங்களைக் காக்க அஜித் ரசிகர்களின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தை, போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து வேற மாதிரி பாடல் கலவையான விமரிசனங்களைப் பெற்றாலும், அஜித் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தின் மற்ற பாடல்களையும் கேட்க ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.