சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அடேங்கப்பா ! 'வலிமை' படத்துக்கு ஒரே நாளில் இவ்வளவு வசூலா ?

வலிமை படத்துக்கு கிடைத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:30 am

DIN

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் நாள் நிறைய திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக காட்சியளித்தது. இந்த நிலையில் வலிமை படத்துக்கு உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.70 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வலிமை திரைப்படத்துக்கு உலக அளவில் முதல் நாளில் ரூ.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், தமிழக அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.