கரண் ஜோஹரை மீண்டும் சீண்டிய கங்கனா ரணாவத்! ஏன் தெரியுமா? 

பிரம்மாஸ்திரம் திரைப்பட வசூல் குறித்து நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.
கரண் ஜோஹரை மீண்டும் சீண்டிய கங்கனா ரணாவத்! ஏன் தெரியுமா? 

பிரம்மாஸ்திரம் திரைப்பட வசூல் குறித்து நடிகை கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.

அமிதாப் பச்சன், ரன்பிர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கிய படம் - பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா. மணிகண்டன் உள்பட ஐந்து பேர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். இணை தயாரிப்பாளர் - கரண் ஜோஹர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள 3-வது படம் இது.

பிரம்மாஸ்திரம் படம் உலகம் முழுக்க 8,913 திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது. பிரம்மாஸ்திரா என்கிற பெயரில் ஹிந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிரம்மாஸ்திரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
முதல் மூன்று நாள்களில் உலகெங்கும் ரூ. 224 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. வியாபாரம் ரீதியாக நல்ல வசூலானதை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான பணியை தொடங்கவிருப்பதாக படக்குழு தெரிவித்தது. 

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் வசூலை பிரம்மாஸ்திரா திரைப்படம் முந்திவிட்டதாக பலர் கருத்து தெரிவித்தைத் தொடர்ந்து அதன் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்குத் தெரியவில்லை எப்படி அவர்களது படம் காஷ்மீர் பைல்ஸ் படத்தை தாண்டியதென?. கற்கள், கம்புகள், ஹாக்கி ஸ்டிக், ஏகே47 அல்லது பணம் கொடுத்து புரமோஷன் செய்து தாண்டினார்களா? பாலிவுட் படங்கள் தங்களுக்குள் போட்டியிட்டு கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள். நான் இந்த முட்டாள்தனமான ரேஸில் இல்லை” என கிண்டலாக பதிலளித்திருந்தார். 

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, “280 கோடி செலவானதாகவும், 280 கோடி உலகம் முழுவதும் வசூலானதாகவும் கூறுவது சிரிப்பாக இருக்கிறது. கரோனாவிற்கு பிறகு உருவாகியுள்ள கரன் ஜோகர் மாடலா இது?  எந்த படமும் தோல்வியில்லை என்ற ஒரு மாடலை உருவாக்கப்பார்க்கிறார் போல. 10 கோடியில் உருவாக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் படத்தை தாண்டியதாக அடாவடித்தனமான வெற்றியாக இருக்கிறதே. காசு கொடுத்து வெற்றிபெற்றதாக தயாரிப்பாளர் கரன் ஜோகர் கூறுவது சிரிப்பாக இருக்கிறதே” என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com