நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு படத்தினை இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு அடுத்தப் படமான கஸ்டடி மோசமான விம்ர்சனங்களை சந்தித்தது. அடுத்து நடிகர் விஜய்யுடன் தளபதி68 படத்தினை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிவப்பினால் ஓவியம் வரையுங்கள்: அமலா பாலின் வைரல் புகைப்படங்கள்!
இந்நிலையில் தளபதி 68 அப்டேட் வருமென காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது வெங்கட் பிரபு இயக்கும் படமில்லை. மீசையை முறுக்கு படத்தின் ஹிப் ஆப் ஆதியின் தம்பியாக நடித்திருந்த அனந்த் இயக்கியுள்ள படம்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு.
“கனவின் துவக்கம்! குடும்பம், அன்பு, பாசம், காதல், ஆசை, கோபம், பிரிவு, சண்டை, இழப்பு, வலி, சந்தோசம், நட்பு நிறைய நினைவுகளுடன் நண்பர்களால் நண்பர்களுக்கு எடுக்கும் படமே..நண்பன் ஒருவன் வந்த பிறகு” என இயக்குநர் கூறியுள்ளார் அனந்த்.
இந்தப் படத்தினை ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தினை எழுதி இயக்கி நடித்துள்ளார் மீசையை முறுக்கு புகழ் அனந்த். இதில் 13 முக்கிய கதாபத்திரங்கள் நண்பர்களாக நடித்துள்ளார்கள். குக்வித் கோமாளி பாலா, வில்ஸ்பட், இர்பான், சபரிஷ் மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி நடித்துள்ளார்கள். இசையமைத்துள்ளார் காற்றின் மொழி பட இசையமைப்பாளர் ஏ.எச்.காஷிப்.
படம் வெளியீட்டுத் தேதி குறித்த விவரங்களை விரைவில் படக்குழு வெளியிடுமென கூறியுள்ளது. சென்னை 28 பிறகு நண்பர்கள் பற்றிய படங்கள் குறைவாக இருப்பதால் இது நன்றகா இருக்குமென இயக்குநர் தெரிவித்துள்ளார்.