தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பிரபல இயக்குநர் மனோபாலா காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். 

News image
Updated On :3 மே 2023, 3:33 pm IST

பிரபல திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 69.

மனோபாலா இதுவரை 40 திரைப்படம், 16 தொலைக்காட்சித் தொடர், 3 தொலைக்காட்சி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர்  மனோபாலா.

மனோபாலா இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் ஊர்க்காவலன், சிறைப்பறவை, பிள்ளை நிலா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பிதாமகன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, தனுஷின் மாப்பிள்ளை போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார்.

மனோபாலா கல்லீரல் பிரச்னை காரணமாக 15 நாள்களக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் அவர் காலமானார்.

அவரது இறப்புக்கு சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.