காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சூர்யா 42: படத்தின் தலைப்பு ‘வி’யில் தொடக்கம்?

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவின் 42வது படத்திற்கு ‘வி’யில் தொடங்கும் பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 42 படத்தின் ஹிந்தி திரையரங்க, சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது இந்தப் படத்திற்கு ‘வீர்’ (veer) என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவாவிற்கு ‘வி’ (V) என்ற எழுத்தில் அதிர்ஷடம் இருப்பதால் இந்த தலைப்பை வைத்ததாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழு இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.