மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஆண் கழுத்தில் தாலி! ஹாட் ஸ்பாட் படத்தின் முன்னோட்ட விடியோ!

ஹாட் ஸ்பாட் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2024, 7:59 pm IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தினை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். இந்தப் படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. சமீபத்தில் இதே மாதிரி சென்னையில் ஒரு ஐடி பெண்ணை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டம் இரண்டு படத்துக்குப் பிறகு அடியே படத்தினை இயக்கினார். ஜி.வி.பிரகாஷ், கௌரி கிஷன் நடித்த இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.

தற்போது புதிய படம் ஒன்றினை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக். இதற்கு ஹாட் ஸ்பாட் எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் நடிகர்கள் கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம் இவர்களுடன் நடிகைகள் கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஆபாசம் நிறைந்ததாக பலரும் விமர்சித்தார்கள். சிலர் இதெல்லாம் தேவையான கருத்துகள் என்றும் இணையத்தில் பேசுபொருளானது. யூடுயூப்பிலும் டிரெண்டானது.

படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் ஏ கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் ஆண்கள் கழுத்தில் தாலி இருக்கும்படியான காட்சிகள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.