நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்த இனிமேல் பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று (மார்ச்.28) மாலை ரஜினி 171 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதன் படத்தலைப்பு டீசர் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் நடிகை ஸ்ருதி ஹாசனின் பாடலில் லோகேஷ் கனராஜ் நடித்துள்ளார்.
ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்த இனிமேல் நல்ல கவனம் பெற்றது.
குறிப்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக ரொமொன்ஸில் அசத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்ற மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காட்டாளன் லோகேஷ் கனகராஜ் போஸ்டர்!
வாழ்த்துகள் அண்ணா... முதல்வர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்!
ரத்தம் கொப்புளிக்க... டிசி டிரைலர்!
லோகேஷ் கனகராஜ் நாயகனாகும் டிசி பட டிரைலர் அறிவிப்பு!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu





