பழைய படங்களை மறுவெளியீடு செய்வது டிரண்ட் ஆகி வரும் நிலையில், பழைய படங்களை ரீமேக் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனின் சத்யா திரைப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தான் இயக்கி, நாயகனாக அறிமுகமான ‘புதிய பாதை’ திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்து நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அழகி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், அப்படத்தை மறுவெளியீடு செய்துள்ளனர்.
இதற்கான, விழாவில் பேசிய பார்த்திபன், “ நான் இயக்கி நடித்த புதிய பாதை படத்தை மறுவெளியீடு செய்யாமல், நேரடியாக மீண்டும் ரீமேக் செய்யப்போகிறேன். டார்க் வெப் என்கிற பெயரில் இயக்கி, நானே நடிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இப்போது, இயக்கி வரும் டீன்ஸ் படத்திற்குப் பின் டார்க் வெப் பணிகளை ஆரம்பிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
1989-ல் வெளியான புதிய பாதை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









