பையா மறுவெளியீட்டுத் தேதி!

நடிகர் கார்த்தி நடித்த பையா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பையா மறுவெளியீட்டுத் தேதி!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது பையா. 

பருத்திவீரன் படத்திற்குப் பின் கார்த்தியின் கிராம தோற்றத்தை மாற்றிய படம் என்கிற பெருமையைக் கொண்டது பையா. 

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் விரைவில் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பையா மறுவெளியீட்டுத் தேதி!
விஜய்யின் கடைசி பட இயக்குநர் இவரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com