கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இந்தியன் 2 பட பாடல்கள் பட்டியல் வெளியீடு

News image
Updated On :31 மே 2024, 3:01 pm

DIN

இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை( ஜூன் 1 ஆம் தேதி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்களை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், மொத்தம் 6 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.