சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கதையின் நாயகியான சாய் பல்லவியின் அறிமுக விடியோ வெளியானது.
சமீபத்தில், முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் வெளியானது. ஜி. வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் அப்பாவின்மீது மிகுந்த பாசம் வைத்துள்ளவர். ஏற்கனவே, டான் படத்தில் இந்த உணர்ச்சிகள் இருந்தன. படமும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் வரும் அக்.18ஆம் தேதி நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.