டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

கோட் படத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன: பிரேம்ஜி

Published On :

நடிகர் பிரேம்ஜி அமரன் கோட் திரைப்படத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. செப். 5 ஆம் தேதி உலகளவில் இப்படம் வெளியாகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் பெரிய ஆவலில் உள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் பிரேம்ஜி, “ கோட் படத்தை பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறையும் விசில் அடிப்பீர்கள். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படியான ஆச்சரியங்களைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

அறிமுக காட்சியே அசத்தலாக இருக்கும். படத்தைப் பார்த்து முடித்ததும் என் அண்ணனிடம் (வெங்கட் பிரபு) கோட் உலகளவில் ரூ. 1500 கோடி வரை வசூலிக்கும் என சொன்னேன். பார்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.

பிரேமிஜியின் பேச்சைக் கேட்ட விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதாக உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.