12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே ஓடிடி வெளியீடு!

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

டைஸ் ஐரே - கோப்புப் படம்

Published On :

நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுள்ளது.

பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்துள்ள டைஸ் ஐரே திரைப்படம் டிச., 5ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் - நைட் ஷிஃப்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப், அருண் அஜிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆன்மாக்களுக்கு வழங்கப்படும் இறுதித் தீர்ப்பு என்பதே லத்தீன் மொழியில் டைஸ் ஐரே எனப்படுகிறது. அமானுஷ்ய திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ஹாரர் விரும்பிகளுக்கு ஏற்றதாக இருக்கும். இப்படம் தற்போது டிச., 5 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

Pranav mohanlals dies irae move ott release date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.