FOLLOW US

ON GOOGLE DISCOVER

தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

சிறந்த நடிகர் மம்மூட்டி! பிரம்மயுகம் படத்திற்கு 2 தேசிய விருதுகள்!

மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படத்திற்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image

பிரம்மயுகம் படத்தில் மம்மூட்டி... - படம்: எக்ஸ் / மம்மூட்டி.

Updated On :18 ஜூலை 2026, 6:37 pm IST

மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படத்திற்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரம்மயுகம்.

மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹரார் திரில்லர் பாணியில் உருவான இப்படத்தில் கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். அவரது மாறுபட்ட நடிப்பு படம் வெளியானபோது பெரிதும் பேசப்பட்டது.

கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்து சிறந்த வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், பிரம்மயுகம் படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகராக மம்மூட்டி, சிறந்த ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால் ஆகியோர் பிரம்மயுகம் படத்திற்காக தேசிய விருதைப் பெறுகின்றனர்.

மம்மூட்டி சிறந்த நடிப்புக்காகப் பெறும் 4 வது தேசிய விருது இது. இதற்கு முன்பு 1989 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் தேசிய விருது வென்றிருந்தார்.

Summary

Two National Awards have been announced for the film Bramayugam starring Mammootty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.