
கிருஷ்ணதேவராயராக நடிக்கும் கிச்சா சுதீப்!
கிருஷ்ணதேவராயர் கதாபாத்திரத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார்...

கிச்சா சுதீப்
நடிகர் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கும் தேவராயா திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் கிச்சா சுதீப் நல்ல கதையசமுள்ள திரைப்படங்களில் நடித்து தனக்கென வணிகத்தையும் ரசிகர்களையும் உருவாக்கியுள்ளார்.
2012-ல் வெளியான நான் ஈ திரைப்படம் கன்னட நடிகராக இருந்த சுதீப்பை தென்னிந்தியளவில் பிரபலப்படுத்தியது. தற்போது, இவர் நடிக்கும் திரைப்படங்கள் பான் இந்திய வெளியீடாகவே திரைக்கு வருகின்றன.
இறுதியாக, மேக்ஸ் என்கிற வெற்றிப்படத்தைக் கொடுத்தார். மார்க் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியை அடைந்தது. தற்போது, அனூப் பந்தாரி இயக்கத்தில் பில்லா ரங்கா பாட்ஷா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயர் வாழ்க்கைக் கதையில் தேவராயராக கிச்சா சுதீப் நடிக்கிறார். தேவராயா எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் இயக்குநர் யாரென அறிவிக்கப்படவில்லை. ஆனால், இப்படம் 2027 டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் என்பதைக் கூறியுள்ளனர்.
The trailer for the movie Devaraya, starring actor Kiccha Sudeep in the lead role, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






