
எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் ஹீரோவாக நடித்த படம்!
எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வத்தை நாயகனாக வைத்து போஸ் வெங்கட் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளது குறித்து...

திருச்செல்வம் நடித்த படத்திலிருந்து... - இன்ஸ்டாகிராம்
எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வத்தை நாயகனாக வைத்து இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
எனினும் சில காரணங்களுக்காக அப்படம் வெளியாகவில்லை என்றும், அப்படத்தில் பின்னர் நடிகர் விமல் நாயகனாக நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோலங்கள் தொடரின் மூலம் சின்ன திரையில் இயக்குநராக அறிமுகமானவர் திருச்செல்வம். கோலங்கள் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம் ஆகியத் தொடர்களை இயக்கினார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்திரம் பேசுதடி, கைராசிக்குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்களை இயக்கினார்.
மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கினார். இந்தத் தொடர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் அதே வேளையில் விமர்சனங்களையும் பெற்றது. இதனால் மக்களிடம் மிகவும் பிரபலமான தொடராக மாறியது.
சிறந்த தொடருக்கான சின்ன திரை விருதையும் எதிர்நீச்சல் வென்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து எதிர்நீச்சல் -2 இயக்கி வருகிறார்.
இதனிடையே இயக்குநர் திருச்செல்வத்தை நாயகனாக வைத்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் கதை எழுதியதாகவும், அதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றதாகவும் கூறினார். அப்படத்தில் திருச்செல்வத்துக்கு ஜோடியாக நடிகை இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாகவும் பின்னர் அப்படம் சார் என்ற பெயரில் விமல் நடித்திருந்ததாகவும் போஸ் வெங்கட் கூறினார். இதனை திருச்செல்வத்தின் கதைக்கு அப்பால் நிகழ்ச்சியில் போஸ் வெங்கட் பகிர்ந்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மெட்டி ஒலி தொடரில் போஸ் என்ற பாத்திரத்தில் நடித்தவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி தொடரை இயக்கிய திருமுருகனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் திருச்செல்வம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் திருச்செல்வத்தை நாயகனாக வைத்து படம் எடுத்துள்ளார் போஸ் வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A film starring Thiruchelvam director of ethirneechal as the hero Sar's film director's speech bose venkat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







