கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இனி பருப்பு வேகுமா?

க டந்த சில தினங் க ளாக எந்த இந் திய நாளி தழ் க ளைப் புரட் டி னா லும் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உண வுப் பொருள் க ளின் விலை ஏற் றம் பற் றிய செய் தி கள் முக் கி யத் து வம் பெற் றுள் ளது. குறிப் பா கப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:23 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

க டந்த சில தினங் க ளாக எந்த இந் திய நாளி தழ் க ளைப் புரட் டி னா லும் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உண வுப் பொருள் க ளின் விலை ஏற் றம் பற் றிய செய் தி கள் முக் கி யத் து வம் பெற் றுள் ளது. குறிப் பா கப் பருப்பு விலை ஏற் றம் பயங் க ர மா யுள் ளது.

கிலோ ரூ. 80 கொடுத்து வாங் கிய பருப்பு வேக வும் இல்லை. கிலோ ரூ. 100 விலை யுள்ள பருப்பு வேக லாம். வேகாத அன் னி யப் பருப் பு க ளுக்கு அநி யாய விலை வழங்க வேண் டி யுள் ளது. உயர்ந்து செல் லும் உணவு விலை கள் நடுத் தர மக் களை வாட்டி எடுப் ப தால் இப் போது அமைச் சர் கள் ஒரு வ ருக் கொ ரு வர் ""உன் னால் தான்'' ""உன் னால் தான்'' என்று ஒரு பக் கம் பொறுப் பைத் தட் டிக் கழிப் ப து டன் கூடவே, ""இனி எங் கள் முதல் வேலை ""உணவு விலை க ளைக் கட் டுப் ப டுத் து வ து தான்'' என்று சூளுரை வேறு... இன்றா, நேற்றா. உணவு விலை ஏற் றம் கடந்த ஆண்டே நிகழ்ந் து விட் டது. எதுவோ நேற் று தான் விலை உயர்ந் த து போல் இவர் கள் பேசு கி றார் கள்.

வி லை வா சி யைக் கட் டுப் ப டுத்த பட் ஜெட் டில் பணம் ஒதுக் கு வ தா க வும் பேச் சுள் ளது. பருப்பு ஏற் று மதி செய் யும் பல நாடு க ளில் இந் தி யக் கதை உள் ளது. தவி ர வும், ஏற் று மதி செய் த வர் க ளுக் குப் பழைய பாக்கி இன் னம் தர வில் லை யாமே. உண வுப் பற் றாக் குறை உல க ளா வி ய தா யுள் ளது. ஏற் று மதி நாடு க ளி லும் பருப் புக் குப் பற் றாக் குறை. சும்மா பருப்பு வெந் து வி டாது. எப் போது பருப்பு வரும்?

கைக் கு ழந் தைக்கு சாதம் போட் டுப் பருப் புப் போட்டு நெய் போட்டு மணக்க மணக் கப் பிசைந்து ஊட்ட முடி யாத தாய் மார் க ளின் கவலை விவ சாய அமைச் ச ருக்கு எட் டுமா? எட் டவே எட் டாது. ஏனெ னில் பருப் பைக் காணோம், அரி சி யைக் காணோம் என் றால் மதிப் புக் கு ரிய விவ சாய அமைச் சர் வீர பாண் டி யா ரும், கிரிக் கெட் அமைச் ச ரும் மத் திய விவ சாய அமைச் ச ரு மான சரத் ப வா ரும் பி.ட்டி கத் த ரிக் காய் களை மான் சண்டோ - மஹைக்கோ நிறு வ னங் க ளி ட மி ருந்து வாங்கி வழங் கு வ தாக உறுதி அளித் துள் ளார் கள். அமைச் சர் க ளின் கவலை வள ரும் குழந் தை க ளுக் குப் பருப்பு சாதம் வழங் கு வ தாக இல்லை. மாறாக யு.எஸ். நிதி உதவி உயி ரித் தொழில் நுட் பம் பாக் கேஜ்- 2லிருந்து துரோகி விஞ் ஞா னி க ளுக்கு வரும் பாக் கே ஜு க ளைக் கூறு போட் டால் எவ் வ ளவு தேறும் என் ப தில் ஆர் வம் உள் ளது. பருப்பு ஒரு கேடா? பி.ட்டி. வெண் டைக் காய், பி.ட்டி முட் டைக் கோஸ், பி.ட்டி மக் காச் சோ ளம் என்று எவ் வ ளவு அயிட் டங் கள் உள் ளன. பருப்பு நில மெல் லாம் பி.ட்டி பருத்தி நில மா னது. இன்று பருப்பு அபேஸ். பி.ட்டி மக் காச் சோ ளம் பி.ட்டி வெண்டை வந்து இனி கோதுமை நிலம் அபே ஸô கும்.

உ ல கி லேயே புரத உண வைப் பருப்பு வடி வில் சைவ மாக உண் ப வர் க ளின் எண் ணிக்கை இந் தி யா வில் மட் டுமே உண்டு. இதர நாடு க ளில் இறைச்சி உணவு. ஆகவே, இந் தி யா வில் தான் பருப்பு உற் பத் தி யும் அதி கம். பருப்பு நுகர் வும் அதி கம். பருப்பு இறக் கு ம தி யும் அதி கம். ஆகவே இந் திய விலையை வைத் துத் தான் ஏற் று மதி நாடு க ளின் விலை க ளும் ஏறு கின் றன. கடந்த 50 ஆண் டு க ளா கப் பருப்பு உற் பத் தி யும் பருத்தி சாகு ப டி யும் படிப் ப டி யா கக் குறைந் து விட் டது. படிப் ப டி யா கப் பருப்பு இறக் கு மதி உயர்ந் து விட் டது.

இன்று அனைத் து ல கச் சந் தை யில் இவ் வ ளவு விலை உயர்ந் தா லும் இந் தி யா வி லும் பருப்பு விலை ஆகா சத் தைத் தொட் டா லும் கூட விவ சா யி கள் பருப்பு சாகு படி செய்ய முன் வ ரு வது இல்லை. ஏனெ னில் இந் தி யா வில் பருப்பு சாகு படி செய் வதா பி.ட்டி பருப்பு உற் பத்தி செய் வதா என் பதை அமெ ரிக் கத் தொழில் நுட்ப உத வித் திட் டம் நிர் ண யிக் கி றது. ஆகவே, இந் திய மாநில அர சு கள் பருப்பு உற் பத் தி யா ளர் க ளுக்கு எந் தச் சிறப்பு உத வியோ, கொள் மு தலோ, ஊக் க வி லை களோ வழங்க முன் வ ரு வது இல்லை. நாளைய வர லா றில் இந் தி யா வில் பருப்பு சாகு படி இருந் ததா என்ற சந் தே கம் வந் து வி டக் கூடாது என்று கருதி, நாம் சில விவ ரங் க ளைப் பதிவு செய்து கொள் வது நல் லது.

1985-86-ம் ஆண்டு வரை இந் தி யா வில் சரா ச ரி யாக 2.3 கோடி ஹெக் டே ரில் பருப்பு விளை விக் கப் பட்டு, உற் பத்தி 1.3 கோடி டன் கள் விளைந்த நிலை குறைந்து இன்று 1.90 கோடி ஹெக் டே ரில் பருப்பு சாகு படி செய் யப் பட்டு உற் பத்தி 90 லட் சம் டன் க ளா கக் குறைந் து விட் டது. பருப்பு அதி க பட் சம் மானா வா ரி யா க வும், கலப் புப் ப யிர் க ளில் ஒன் றா க வும் பயி ரா கி றது. 1994-ல் 5 லட் சம் டன் கள் பருப்பு இறக் கு மதி படிப் ப டி யாக உயர்ந்து இன்று 2009 வரை பருப்பு இறக் கு மதி ஆண் டுக்கு 30 லட் சம் டன் க ளாக உயர்ந் து விட் டது. இதில் சோகம் எது வெ னில் நாட் டில் பருப்பு உற் பத் தியை உயர்த்த பருப்பு சாகு ப டிக்கு இல வச சொட்டு நீர்ப் பா ச னம்- தெளிப் புப் பாசன வச திக்கு முயற்சி என்று உருப் ப டி யாக நட வ டிக்கை எடுக் கா மல் ஆண் டுக்கு ஆண்டு எவ் வ ளவு பருப்பு இறக் கு மதி செய் ய லாம் என் ப தற்கு எக்ஸ் பர்ட் கமிட்டி செயல் ப டு கி றது. இந் தி யா வின் பருப் புக் கொள்கை கற் ப னைக்கு எட் டாத மட மை யில் செயல் ப டு வது நிரூ ப ணம்.

இந் தி யா வில் எவ் வ ளவு பருப் பு கள் வகை வ கை யாக உள் ளன? மொத்த உற் பத் தி யில் 40 சதம் பங்கு கொண் டைக் க டலை வழங் கு கி றது. ஏறத் தாழ 40 லட் சம் டன் கள் கொண் டைக் க ட லை களை சுண் டல் வடி வ மாக உண் பது உடம் புக்கு ஆரோக் கி யம். ஆனால் கடலை மாவாக மாற் றப் பட்டு பஜ்ஜி, பகோடா, மைசூர் பாகு என்று உண் ப தும் நொறுக் குத் தீனி யாக மிக் சர், ஓமப் பொடி, முறுக்கு என்று கொரிப் ப தும் விரும் பத் தக் க தல்ல. குறிப் பாக உடல் பரு ம னாக உள் ள வர் கள் தவிர்க் க லாம். கொண் டைக் க ட லை யில் கரிய பழுப்பு, சந் நி யாசி, வெளிர் மஞ் சள், கருப்பு, குலாபி எல் லாம் சிறப் பா னவை. இந் தி யா வில் விளை யக் கூ டிய கொண் டைக் க டலை வேறு நாடு க ளில் கிடை யாது. இறக் கு ம தி யா வது வெள் ளைக் க டலை மட் டுமே. இதற்கு காபூ லி செனா என் றும் பெயர். இது ஆப் கா னிஸ் தான், ஆஸ் தி ரே லியா போன்ற நாடு களி லி ருந்து இறக் கு ம தி யா கி றது. வெள் ளைக் க ட லை யில் உப் புக் க ட லையோ பொட் டுக் க ட லையோ தயா ரிக்க முடி யாது.

இ ரண் டா வ தாக, துவரை, மொத் தப் ப ருப்பு உற் பத் தி யில் இதன் பங்கு 20 சதம். அதா வது ஏறத் தாழ 20 லட் சம் டன் கள். நமது பற் றாக் கு றையை மியான் மர் மட் டுமே இட்டு நிரப் பு கி றது. நைஜீ ரி யாவி லி ருந் தும் வரு கி றது. உள் ளூ ரில் நாம் விளை விக் கும் பருப் பை விட இறக் கு ம திப் பரப்பு தர மா னது இல்லை. துவ ரை யின் தோலி நிறத்தை வைத்து வெள்ளை, சிவப்பு, கருப்பு, பழுப்பு, மொசைக் என்று ஆறு ரகங் களை வேற் று மைப் ப டுத் த லாம். இவற் றில் வெள்ளை நிற மும், மொசைக் நிறத் துவ ரை யும் தரம் மிகுந் தவை. பெரி தா க வும், நன்கு வேகக் கூ டி ய தா க வும் இருக் கும். சிவப் பும் அவ் வாறே. துவ ரை யின் பெயரே ஆங் கி லத் தி லும், ஹிந் தி யி லும் சிவப் புப் பருப்பு. அர் ஹர் என் றா லும் சிவப்பு. மொசைக் என் பது மரத் து வரை. இது கொங்கு நாட் டின் சிறப்பு ரகம். பெரன் னி யல் 10 ஆண் டு கள் பலன் தரும். பல் லு யிர் வேளாண் மைக்கு ஏற்ற ரகம். நிறம் ஊதா வில் பழுப் புத் திட் டு கள் பதித்து டிசை னாக இருக் கும். இதே கொங்கு நாட் டில் தான் தமிழ் நாடு வேளாண் பல் க லைக் க ழ கம் உள் ளது. இப் ப டிப் பட்ட அரிய துவரை ரகத்தை விரி வாக் கம் செய் யா மல் அமெ ரிக்க ஆலோ ச னை யை யும், மான் சென்டோ ஆலோ ச னை யை யும் கேட்டு பி.ட்டி, பி.ட்டி என்று புலம் பும் கொடு மையை என் னென் பது!

உ ளுந்து மூன் றா வது முக் கிய பருப்பு வகை. மொத் தப் பருப்பு உற் பத் தி யில் உளுந்து 4 சதம் மட் டுமே. மொத்த உளுந்து உற் பத்தி சரா ச ரி யாக 12 லட் சம் டன் முதல் 15 லட் சம் டன் கள். இதில் சாம் பல், கருப்பு, கரும் பச்சை, பெரு வெட்டு, சிறுசு என்ற ரக வேற் று மை கள் உள் ளன. இவை த விர, ஏரா ள மான ரகங் களை ஒரு கா லத் தில் தமிழ் நாடு வேளாண் பல் க லைக் க ழ கம் வெளி யிட் டுள் ளது.

பா சிப் ப யறு அல் லது பச் சைப் ப ருப்பு நான் கா வது இடத் தில் உள் ளது. இது சுமார் 10 லட் சம் டன் கள் உற் பத் தி யா கி றது. மொத்த உற் பத் தி யில் இதன் பங்கு 4 சதம்.

உ ளுந் தும் பய றும் இந் தி யச் சிறப் பு கள். சீனா வி லும் உண்டு. ஏற் று மதி செய் யும் அள வில் எந்த நாட் டி லும் சரக் கு கள் இல்லை.

இந்த நான்கு முக் கிய பருப் பு க ளைத் தவிர தட் டாம் ப யறு என்ற காரா மணி தென் மா நி லங் க ளில் மட் டுமே விளை கின் றன. மலைப் பி ர தே சங் க ளில் "ராஜ்மா' என்ற காரா மணி விலை ம திப் புள்ள பருப் பு க ளில் ஒன்று. நம்ம ஊர்ச் சிவப் புக் காரா ம ணி யின் பெரிய உரு வமே ""ராஜ்மா''. இவற் றைத் த விர, மசூர், நரிப் ப யறு, பட் டாணி, கேச ரிப் ப ருப்பு ஆகி யவை குறைந்த முக் கி யத் து வம் பெற் றுள் ளது. ஆனால், உல க ளா விய நிலை யில் அதி கம் விளை வது மசூர் பருப்பு. இதைத் தான் துவ ரம் ப ருப்பு என்று அரசு சத் து ண வுக் கூடங் க ளுக்கு வழங் கு கி றது. தொன் று தொட்டே மசூர் துருக் கியி லி ருந்து இந் தி யா வுக்கு வந்த கார ணத் தால் இதற் குத் துலுக் கப் ப யறு என்று தமி ழில் பெய ருண்டு.

÷இந் தி யா வி லும் துலுக் கப் ப யறு சிறிது விளை கி றது. இது சிவப்பு நிறத் தில் இருக் கும். ருசி பாசிப் ப ருப்பு போல் இருக் கும். நன்கு வெந் து வி டும். வடக் கில் பூண்டு, தக் கா ளிப் ப ழம் சேர்த்து செய் யப் ப டும் தால் ரொட் டிக் குத் தொட் டுக் கொள்ள சுவை யாக இருக் கும். பட் டா ணிப் ப ருப்பு மஞ் சள், பச்சை என்று இரண்டு ரகங் கள் ஆஸ் தி ரே லி யாவி லி ருந்து வரு கி றது. கெட்ட கேட் டுக் குக் கேச ரிப் ப ருப் பு கூட இன்று கிலோ ரூ. 50 என்று விற் கப் ப டு கி றது. உண வில் இது அதி க மா னால் முடக் கு வா தம் வரும் நச் சுப் பொ ருள் இயல் பா கவே உண்டு. அதே ச ம யம் பருப்பு வகை க ளில் அதி கம் புர தச் சத்து உள்ள பருப் பும் கேச ரிப் ப ருப் பு தான். இது துவ ரம் ப ருப் பைப் போல் இருக் கும். துவ ரம் ப ருப் போடு கலப் ப டம் செய்து நம்ம ஊர் மளி கைக் க டை க ளில் விற் கப் ப டு வது உண்டு. அள வு டன் உண் டால் பாதிப்பு இருக் காது. அதை மட் டுமே உண் டால் முடங்க வேண் டி ய து தான்.

இவ் வாறு நாம் இந் தி யா வில் விளை யக் கூ டிய பல் வ கைப் பருப் பு க ளின் அருமை பெரு மை களை எடுத் துச் சொல்ல வேண் டிய ஒரு கட் டா யத் தில் வாழ் கி றோம். இவ் வ ளவு சிறப் புள்ள பருப்பு ரகங் கள் இருந் தும் கூட இதன் உற் பத்தி உய ர வில்லை. படிப் ப டி யா கக் குறை கி றது. பிரி யாணி வழங் கும் அர சி யல் இதை ஏன் கண்டு கொள் ள வில்லை? இந் தி யப் பருப்பு வகை க ளுக்கு ஏரா ள மான மருத் து வக் குண மும் உண்டு.

க ட லைப் ப ருப்பு பித் த நீர் சுரப் ப தைக் கட் டுப் ப டுத் தும். பாசிப் ப ருப் பும் துவ ரம் ப ருப் பும் வயிற் றுப் புண்ணை ஆற் றும். உளுந்து ஒப் பற்ற மருந்து. சோடா உப்பு சேர்க் கா மல் நல்ல எண் ணெ யில் செய் யப் ப டும் அனு மார் வடை ஆரோக் கி ய மா னது. வெந் த யத் தைப் போல் வயிற் றுப் புண்ணை ஆற் றும், பேதி யை யும் நிறுத் தும்.

உ ல கி லேயே அதி கம் பருப் பு களை- வகை வ கை யா கச் சாகு படி செய் யும் ஒரு பாரம் பர் யமே பாரத நாட் டின் சிறப்பு. இந் தச் சிறப்பு இனி எதிர் கா லத் தில் இருக் குமா? அழி யுமா? பொறுப் புள்ள அமைச் சர் கள், இருப் பதை விட் டு விட் டுப் பறப் ப தைப் பிடிப் ப தில் ஆர் வ மா யுள் ள னர். இந்த நிலை மாறி, புர தச் சத்து இல் லாத இந் தி யர் க ளுக் குப் புர தம் வழங் கச் சட் டி யில் விதம் வி த மான பருப் பு களை விழச் செய் யும் ஒரு நன் னாள் வர வேண் டும். அன் று தான் பருப்பு வெந்து உள் ளம் குளி ரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.