சந்ததிகளுக்கும் சந்தனம்!
எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் சந்தன மரம் பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. வீடுகளிலும்,


தமிழ்நாட்டில் சந்தன மரம் பயிரிடுவதற்கான தடை 2002-இல் நீக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் 2001-இல் தடை நீக்கப்பட்டுவிட்டது. விவரமறிந்த பணக்காரர்கள் அன்றே சாகுபடியைத் தொடங்கினர். சிலர் குபேரர்களாயினர். போதிய காவல் இல்லாமல் பலர் திருட்டுக் கொடுத்துவிட்டனர்.
எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் சந்தன மரம் பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. வீடுகளிலும், தோட்டங்களிலும் சந்தன மரம் வளர்க்க சட்டத்தில் இடமுள்ளதா? சந்தன மர சாகுபடிக்கு விதிக்கப்பட்ட தடைகள் களையப்பட்ட விவகாரம் விவசாயிகளுக்குத் தெரியவில்லை.
இன்று யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சந்தனம் பயிர் செய்யலாம். சந்தன மரம் எழுப்பிவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு போய்விட்டால் களவு போகும் அபாயம் உண்டு.
தமிழ்நாட்டில் சந்தன மரம் பயிரிடுவதற்கான தடை 2002-இல் நீக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் 2001-இல் தடை நீக்கப்பட்டுவிட்டது. விவரமறிந்த பணக்காரர்கள் அன்றே சாகுபடியைத் தொடங்கினர். சிலர் குபேரர்களாயினர். போதிய காவல் இல்லாமல் பலர் திருட்டுக் கொடுத்துவிட்டனர்.
சந்தன மர அறுவடை பற்றிய புதிய செய்திப்படி "பட்டால்தான் சந்தனம்' என்ற பழமொழியைப் பொய்யாக்கும் விதமாகப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அறுவடையைத் தொடங்கி, போட்ட முதலீட்டுக்கு லாபம் பெறலாம் என்று கர்நாடக அரசு உத்தரவாதம் தருகிறது.
பெங்களூரில் உள்ள மர அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் ஜ்ர்ர்க் ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ற்ங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) வழங்கும் தகவல் அடிப்படையில், சந்தன மரம் நட்ட எட்டாம் ஆண்டிலிருந்து வைரம் வளர்கிறது. ஆண்டுக்கு ஒரு கிலோ என்ற கணக்கில், நட்ட பதினாறாம் ஆண்டிலேயே அறுவடை செய்யலாம்.
பதினாறு வயது மரத்திலிருந்து 15 கிலோ வைரம் எடுக்கும்போது கிலோ ரூ.3,000 என்று வைத்தால் ரூ.45,000 வருமானம் உண்டு. சந்தன மரத்தை வெட்டினால் அதன் வைரப் பகுதியைத் தனியே பிரித்தெடுத்து உருட்டு சந்தனக் கட்டைகள் செதுக்கப்படுகின்றன.
இப்போதைய நிலவரப்படி சந்தனக் கட்டை அதன் தரத்தைப் பொருத்து கிலோ ரூ,3,000-இல் தொடங்கி கிலோ ரூ.6,000- வரை விலை போகிறது. "பொறுத்தார் பூமியாள்வார்' என்ற பழமொழிப்படி முப்பதாண்டு வயதுள்ள மரம் ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள சந்தனக் கட்டை வழங்கும். சந்தனக் கட்டைக்கு ஏக கிராக்கி உள்ளது. தேவை உள்ள அளவில் வழங்கல் இல்லையாம்.
உலகச் சந்தையில் உள்ள தேவையில் கால் பங்குதான் இன்று வழங்க முடிகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளின் தேவையை ஒட்டி விலை நிர்ணயமாகிறது.
இதுநாள் வரை சந்தனக் கட்டை உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியாவே முதலிடம் என்பதை சொல்லத் தேவையில்லை.
உலக உற்பத்தியில் 80 சதவீதம் இந்திய விளைச்சலே. இப்போது நிலைமை மாறி வருகிறது. இந்தியாவுக்குப் போட்டியாக ஆஸ்திரேலியா தலைதூக்கிவிட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து பெறப்பட்ட சந்தன விதைகள் கொண்டு சுமார் 9,000 ஹெக்டேர் நிலப் பரப்பில் விளைவித்த சந்தன மரங்கள் அறுவடைக்குத் தயாராகிவிட்டன.
பிஜி, ஹோனலுலு, வியத்நாம், மலேசியா ஆகிய நாடுகளிலும் சந்தன மர சாகுபடி உண்டு. சந்தனக் கட்டைச் சந்தையைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவில் இதுநாள் வரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இன்றைய இந்தியாவில் சுமார் 20,725 ஹெக்டேரில் சந்தனம் புதிதாகப் பயிரானாலும் அவை வளர்ந்து அங்காடிக்குள் நுழைய இருபது ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.
இருப்பினும், சந்தன மரம் பயிரிடுவதில் உள்ள தடை நீக்கப்பட்ட உடனேயே பலர் சந்தனம் பயிரிடத் தயாராயிருந்தாலும் போதுமான அளவில் சந்தன மர நாற்றுகள் கிடைக்கவில்லை. தடை நீக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாகப் பரவாததால் இன்னமும்கூட சில விவசாயிகளுக்குத் தடை நீக்கம் பற்றிய செய்தி தெரியவில்லை.
வனத் துறைக்குச் சொந்தமாக உள்ள மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டிக் கடத்தும்போது பிடிபடும் செய்திகள் ஊடகங்களில் வருவதால் குழப்பம் நீடித்து வருகிறது.
தனியார் பயிரிடும் சந்தன மரங்களைச் சந்தைப்படுத்த வசதியாக 2009-இல், வனத் துறையின் ஏகபோகம் நீக்கப்பட்டுத் தனியார் நேரிடையாகவே அரசு சார்புள்ள நிறுவனங்களான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜன்ட் லிமிடெட் நிறுவனத்துக்கும், கர்நாடகா ஹேண்டிகிராஃப்ட்ஸ் டெவலப்மெண்ட் கார்பரேஷனுக்கும் விற்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தவிரவும் கர்நாடக அரசு, சந்தன மர சாகுபடியாளர்களுக்கு 75 சதவீத மானியமும் வழங்க முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மர நர்சரிகளிலும் சந்தனக் கன்றுகள் வளர்க்கப்பட்டு அவர்களின் லாபமும் உயர்ந்து விட்டது. இன்று பெரும்பாலான மர நர்சரிகளில் சந்தன மரக் கன்று விற்பனையே அதிகம்.
இதுநாள்வரையில் காலம் காலமாகக் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே சந்தன மரங்கள் வனத் துறையின் ஏகபோகமாக வனப் பகுதியில் மட்டுமே இருந்தன. வனத் துறையும் கர்மசிரத்தையாகக் கன்று வளர்த்து நட்டுவிடவில்லை. சந்தன மர விதைகள் உதிர்ந்து வெட்டும் இடத்தில் தொடர்ந்து முளைக்கும்.
சந்தன விதையை ருசிக்கும் குயில், சம்போதி போன்ற பறவைகள் கழித்த எச்சத்தினாலும் சந்தன மரத்தின் பல்லுயிர்ப் பெருக்கம் காப்பாற்றப்பட்டு அருகிவிடாமல் தழைத்தன.
வன எல்லைக்கு அப்பால் சம நிலத்திலும் சந்தன மரம் செழிப்புடன் வளர்வதைக் கவனித்த வனத் துறை, தனியார் பட்டா நிலங்களில் வளர்க்க உதவி வருவதுடன் இதர மாநிலங்களிலும் சந்தன மர வளர்ப்புக்கு வழிவிட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் குஜராத், தெலங்கானா, ஆந்திரம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளிலும், தனியார் நிலங்களிலும் சுமார் 10,000 ஹெக்டேர் வரை சந்தன மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறிப்பாக, தெலங்கானா மாநில வனத் துறைக்குச் சொந்தமான 5,104 ஹெக்டேர் நிலங்களில் சந்தனக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் சுமார் 500 ஹெக்டேர் தனியார் நிலங்களில் சந்தனம் அறிமுகமாகியுள்ளது.
சந்தனக் கட்டைகளுக்கு நல்ல ஏற்றுமதித் தேவை இருந்தாலும், நமது உற்பத்தி நம்முடைய தேவையையே நிறைவேற்றாத சூழ்நிலையில் சந்தன மரத் துகள்களை நாம் வியத்நாமிலிருந்து நம்முடைய சந்தன எண்ணெய்த் தேவைக்காக இறக்குமதி செய்கிறோம்.
இன்று நாம் எழுப்பியுள்ள கன்றுகள் மரமாகி வைரம் விளையும் காலம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
"வாழ்வு தரும் மரங்கள்' என்ற நூலை எழுதும்போது, சந்தன மரம் பற்றி நான் குறிப்பிட்ட கருத்துகள் இன்று மறுபரிசீலனைக்கு வந்துவிட்டன.
சாதாரணமாக, சந்தன மரத்தில் வைரம் பாய 20 ஆண்டுகளாகும் என்றும், அந்த மரம் 50 வயதில் பட்டுப் போனதும் அறுவடை செய்தால் நல்ல லாபம் உண்டு என்றும் நான் அன்று கேட்டறிந்த விஷயத்தை நிஜமென்று நம்பினால், சந்தனத்தின் பயன் சந்ததிகளுக்குத்தான் கிட்டும்.
50 வயதுள்ள சந்தன மரக் கட்டைகளின் மணத்துக்கும், 20 வயது மரத்தின் சந்தனக் கட்டை மணத்துக்கும் வித்தியாசம் உண்டு. பொன்னாகும் தொன்மை, சந்தன மர அறிவியல் தொழில்நுட்பம் கன்று வைத்த 16-ஆவது ஆண்டே அறுவடை செய்யலாம் என்பது பழைய நிலை.
பணம் கிட்டும். அந்த அளவு மணம் கிட்டுமா? இப்போது மணமா பெரிது? சந்தன மரத் திருடர்கள் யாரும் 50 வயது மரத்தையா தேடுகிறார்கள்? 15 வயது மரத்தைத்தான் திருடுகிறார்கள்.
10 கிலோ வைரம் இருந்தால்கூட ரூ.30,000 தேறுமே! தனியார் நிலங்களில் சந்தன மரம் வளர்ப்பது சரி. வளர்ந்த மரங்களுக்குப் பாதுகாப்பு அதைவிட முக்கியம்.
எனினும், சந்தன மர அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் சந்தன மரம் பயிரிட்டால் தானும் பயனடைந்து, தன் சந்ததிகளுக்கும் சற்று மிச்சம் உண்டு.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...