கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ருசியை நம்பிப் புசிக்காதே!

ஊடகங்களில் நூடுல்ஸ் விஷம் ஓய்வு பெற்றதும் இப்போது கிளம்பியுள்ளது ரொட்டியில் விஷம். அதுவும் முதல் தரமான விஷமாம். மரணத்தை உடனே ஏற்படுத்தாதாம். புற்றுநோய் ஏற்படுமாம்.

News image
Updated On :27 ஜூன் 2016, 9:16 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

ஊடகங்களில் நூடுல்ஸ் விஷம் ஓய்வு பெற்றதும் இப்போது கிளம்பியுள்ளது ரொட்டியில் விஷம். அதுவும் முதல் தரமான விஷமாம். மரணத்தை உடனே ஏற்படுத்தாதாம். புற்றுநோய் ஏற்படுமாம்.

தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையத்தின் மாசு அளவிடும் சோதனைக்கூடம் கடைகளில் விற்கப்படும் பலவகை ரொட்டிகளை வாங்கிப் பரிசோதித்து வெளியிட்ட முடிவுதான் ரொட்டியில் விஷம்.

ரொட்டித் தொழில் விற்பன்னர்களான பிரிட்டானியா, ஹார்வஸ்ட் கோல்டு, பர்ஃபக்ட் மீடியம், லாமெர்க், கே.சி.எஃப் போன்ற தயாரிப்புகளை சோதனை செய்துள்ளனர். பெரிய பிராண்ட் நிறுவனங்களே இப்படி என்றால் ஊருக்கு ஊர் உள்ள சிறிய பேக்கரிகளின் ரொட்டி, பன் போன்றவை சோதனைக்குள்ளானால் விஷ அளவு கூடுதலாகவே இருக்கும்.

என்ன என்ன வகையான ரொட்டி, பன் சோதிக்கப்பட்டன என்று கேட்டால் விடை உங்கள் மூச்சை நிறுத்தும். ஒயிட் பிரட், ஹோல் வீட் பிரட், பிரவுன் பிரட், சான்ட் விச் பிரட், மல்டி கிரைன் பிரட், பாவ் ரொட்டி, பன், பர்கர் பிரட், பீட்ஸா பிரட் ஆகிய எல்லாவற்றிலும் விஷப்பரிசோதனை செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட ரொட்டி, பன்களில் இம்ப்ரூவ் மிக்ஸ் என்ற பெயரில் பொட்டாசியம் புரோமேட் (KBrO3), பொட்டாசியம் அயோடேட் (KlO3) ஆகிய நச்சுப் பொருள்கள் சேர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். மாவில் சேர்த்த விஷம் ரொட்டியான பின்னும் எஞ்சியுள்ளதைப் பட்டியலிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வகை ரொட்டியிலும் எவ்வளவு விஷம் எஞ்சியுள்ளது என்ற விவரமும் வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எவ்வளவு மடங்கு அதிகம் என்ற கணக்கைப் படித்தால் அது ரொட்டி சாப்பிட்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும். இதோ அந்தக் கணக்கு:

ரொட்டிவகை விஷ அளவு (மில்லியனில்)

ஒயிட் பிரட் 12 முதல் 17

ஹோல் வீட் பிரட் 3 முதல் 5

பிரவுன் பிரட் 6 முதல் 8

மல்டி கிரைன் பிரட் 2 முதல் 4

சான்ட் விச் பிரட் 21

பாவ் பிரட் 15 முதல் 22

பன் 17 முதல் 21

பர்கர் பிரட் 6

பீட்ஸா பிரட் 7

(அனைத்துலக உணவுப் பாதுகாப்பு தரவிதிப்படி அனுமதிக்கப்படும் அளவு என்பது மில்லியனில் 005 முதல் 010 தான். மேற்படி ரொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட விஷம் பல நூறு மடங்கு அதிகம்.)

இந்தியாவில் இயங்கும் உணவுப்பாதுகாப்பு - தரம் - சேர்க்கை விதிமுறைகள் 2011-இல் வகுக்கப்பட்டபோது ரொட்டிமாவில் பொட்டாசியம் புரோமேட், அயோடேட் இவற்றை மில்லியனில் 20 வரை அனுமதித்துள்ளார்கள்.

ஆகவே, சட்டப்படி ரொட்டி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க முடியாது. உணவு பாதுகாப்பு - தரம் குறித்த விதிகளை வகுக்கும் அதிகாரிகளுக்கு பொட்டாசியம் புரோமேட், அயோடேட் ஆகியவை விஷம் என்ற உண்மை எப்படித் தெரியாமல் போயிற்று? புற்றுநோய் நிபுணர்களின் கருத்துப்படி மேற்படி ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தில்லி அறிவியல் சுற்றுசூழல் மையம் பலவகையான ரொட்டி, பன்களில் எஞ்சியுள்ள புரோமேட், அயோடேட் விஷம் பற்றிய பரிசோதனை முடிவுகளை மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் வழங்கி, விஷ ரசாயனச் சேர்க்கைகளைக் கைவிடுமாறு ரொட்டி நிறுவனங்களுக்கு உத்தரவு இடவேண்டும் என்று யோசனையும் கூறியுள்ளது.

சாதாரணமாக பன், பிரட் ஆகியவற்றில் ஈஸ்ட் சேர்ப்பார்கள். இதனால் பஞ்சுபோல் பன், பிரட் ஆகிவிடும். அதனால் விஷம் இல்லை. மாவைப் பிசையும் போது விஷமான இம்ப்ரூவ் மிக்ஸ் சேர்க்கப்படுகிறது. இதனால் ரொட்டி ஒரே சீராக வெந்து வடிவம் ஏற்படுகிறதாம்.

இவ்வளவு நாள்கள் இல்லாமல் இப்போது ஏன் இந்த விஷ பூதம் கிளம்பியுள்ளது? மாவாக உள்ளபோதே இம்ப்ரூவ் மிக்ஸ் கலக்கப்படுவதால் ரொட்டி வெந்து சுடும்போதே விஷம் போய்விடும் என்று நம்பப்பட்டதாம். இது பொய்யாகிவிட்டது. ரொட்டி நிறுவனங்களின் கூற்று பொய்யென்று நிரூபணமாகி 26 ஆண்டுகளாகிவிட்டன.

ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய யூனியனில் தடை செய்யப்பட்டுள்ளது. 1993-இல் நைஜீரியா தடை செய்தது. தொடர்ந்து கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்ரீலங்கா, பெரு, பிரேசில், சீனா ஆகிய நாடுகளும் தடை செய்தன.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தடை இல்லை. ஏன்? இந்தியாவில் மட்டும் பன்னாட்டு உணவு நிறுவனங்களின் ரொட்டி உற்பத்தி - வியாபார மதிப்பு 40 பில்லியன் டாலர். அதனால் அரசு விஷ ரொட்டியைத் தடை செய்ய முன்வரவில்லை.

இந்தியாவில் ஏழை - பணக்காரர், நடுத்தரம் - மேல்மட்டம் என்று பாகுபாடு இல்லாமல் சுமார் 50 கோடி மக்களின் அவசர உணவாக ரொட்டி உள்ளது. இரண்டு ரூபாய்க்கு ஒரு பன் வாங்கி காலை உணவை நிறைவு செய்யும் ஏழை மக்களும் இந்தியாவில் உண்டு.

ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பே ரொட்டி கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. பைபிளில் ரொட்டியைப் பற்றிய குறிப்புகள் உண்டு. சொல்லப்போனால் கிறிஸ்தவர்களின் அன்றாடப் பிரார்த்தனையில் ஒரு பைபிள் வாசகம் ரொட்டியைப் பற்றியது. "பரமபிதாவே இன்று என்னுடைய ரொட்டியை வழங்குவீராக'.

வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி முதல் ரொட்டி எகிப்தில் தயாரிக்கப்பட்டதாம். ரொட்டி கற்காலக் கண்டுபிடிப்பாம். உணவைக் கெடாமல் பாதுகாப்பதில் ரொட்டி கண்டுபிடிப்பு ஒரு மைல் கல். எனினும் மாயா நாகரிகம் தோன்றிய தென்னமெரிக்காவில் செவ்விந்தியர்கள் மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்தும் சீமைக்கருவேல் விதை மாவிலிருந்தும் ரொட்டி தயாரித்தார்களாம். கற்கால ரொட்டி மாவு மக்காச்சோளத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லை. ரொட்டி மாவு கல் திரிகையில் அரைக்கப்பட்டது. அது கல். அது கற்காலக் கருவி. சிந்து சமவெளி நாகரிகத்திலும் இத்திரிகை உண்டு. தொழில் புரட்சி ஏற்பட்ட பின்னர் ரொட்டி மாவு அரைக்கும் ஆலைகள் கண்டுபிடிக்கப்படும் வரை கல் திரிகையில்தான் ரொட்டி மாவு அரைக்கப்பட்டது.

அந்தக்கால அடுப்பில் கல் திரிகையில் மாவு அரைத்துச் செய்த ரொட்டியில் இருந்த வைட்டமின் விவரங்களையும் இக்கால ஆலைகளில் அரைக்கப்பட்ட மாவிலிருந்து செய்த ரொட்டியில் உள்ள வைட்டமின் விவரங்களையும் ஒப்பிட்டு சர் ஜேக் ட்ரம்மாண்ட் (நஐத ஒஅஇஓ ஈதமஙஙஞசஈ) கூறியுள்ளதைக் கவனிக்கலாம். இவர் உணவில் உள்ள வைட்டமினைக் கண்டுபிடித்த விஞ்ஞானி டாக்டர் கசிமிர்ஃபங்க் (ஈழ்.இஹள்ண்ம்ண்ழ் ஊன்ய்ந்) உடன் இணைந்து ஊட்டச்சத்து ஆய்வு நிகழ்த்திய நிபுணர்.

மாவு இயந்திர ரொட்டி ரொட்டி

இரும்பு 13 மி.கி. 7 மி.கி

வைட்டமின் ஏ 425 0 மி.கி

நிகோடினிக் அமிலம் 5.4 3.8

வைட்டமின் டி 8.0 0

புதிய கற்காலத் திரிகையில் தானிய மொக்கு (ஞ்ங்ம்) அரைபட்டது. நவீன அரைவையில் மொக்கு நீக்கப்படுவதால் வைட்டமின்களும், தாதுப்புச் சத்துகளும் இழக்கப்படுகின்றன. இப்படி இழக்கப்பட்ட சத்துகளை ஈடுசெய்யத்தான் இன்று ரசாயன விஷங்கள் சேர்க்கப்படுகின்றனவோ?

பழங்கால ரொட்டி ருசிக்காது. இக்கால ரொட்டி ருசிக்கும். முதல்தரமான விஷம் சேர்க்கப்படுவதால் புற்றுநோய்க்கு உத்தரவாதம் உண்டு. ருசியை நம்பி புசிக்காதே என்ற தாரக மந்தரத்தை உச்சாடனம் செய்தால் நுகர்வோர் பிழைக்க வழி உண்டு.

விவசாயத்தில் உணவுப் பயிரை மண்ணில் விதைக்கும் போதே விதையில் விஷப் பூச்சு செய்வார்கள். உழும்போது நைட்ரேட் பாஸ்பேட் பொட்டாஷ் ரசாயன உரங்களைத் தூவியும் பூச்சி மருந்து என்ற பெயரில் ஆர்கோ குளோரின் ஆர்கனோ பாஸ்ஃபரஸ் அடித்துப் பயிரிலும் மண்ணிலும் விஷம் ஏற்றப்படும். ரொட்டி செய்யும் மாவில் இந்த விஷம் எஞ்சியுள்ளது. இதற்குமேல் புரோமேட்டும் அயோடேட்டும் தேவையா?

அன்றாடம் வீட்டில் சமைக்கும் உணவையே நம்பமுடியவில்லை. அது வேண்டாம் ரெடிஃபுட் என்று பர்கர், பிஸ்ஸா, கோக், பெப்சி என்று பார்த்தால் அவை ஜங்க் உணவு என்றும், ஓவர் எனர்ஜியால் உடல் பருமனாகும் என்கிறார்கள். நூடுல்ஸ் வேண்டாம் அதுவும் விஷம்.

இனி என்னதான் செய்வது? கடையில் ஒரு ரொட்டி வாங்கி வெண்ணெய், ஜாம் தடவி உள்ளே தள்ளலாம் என்று பார்த்தால் இடி விழுந்தால் போல் செய்தி வருகிறது. பாழாய்ப்போன விஷம் மலிவான ரொட்டியையும் விட்டுவைக்கவில்லை. காலை உணவு ரொட்டியை நம்பி வாழ்கின்றவர்கள் இனி ரொட்டியை மறந்துவிட வேண்டியதுதான்.

பலருக்குப் பாழாய்ப்போன நாக்கு டோஸ்டட் பிரட்டைக் கேட்கும். அப்போது அவல் உப்புமா, ரவா உப்புமா என்று மாற்றிச் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். உணவு முக்கியம்தான். உயிர் அதைவிட முக்கியமல்லவா?

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.