பாலியல் பலாத்காரங்களை நொடியில் காட்டிக் கொடுக்கத்தக்க மேம்படுத்தப்பட்ட உள்ளாடைகள் அறிமுகம்!

இந்த உள்ளாடை பெண்களுக்குச் சிறந்த பாதுகாப்புக் கவசமாக விளங்குவதுடன், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் சந்தர்பத்தில் அது குறித்தான தடயங்களைப் பதிவு செய்து நொடியில் காவல்துறையினருக்கோ
பாலியல் பலாத்காரங்களை நொடியில் காட்டிக் கொடுக்கத்தக்க மேம்படுத்தப்பட்ட உள்ளாடைகள் அறிமுகம்!

பாலியல் வன்முறைகள் நிகழ்வதற்கான முகாந்திரங்கள் என்ன? பெரும்பாலும் பெண்கள் தனிமையில் மாட்டிக் கொள்ளும் போது தான் ஆண்களுக்கு அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் தைரியம் வருகிறது. தனிமையில் இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அவர்களை எளிதில் தங்களது இச்சைகளுக்குப் பலியாக்கிக் கொள்ளலாம் என்ற கீழ்த்தரமான எண்ணமே இதற்குக் காரணம். அதே சமயம், பெண்கள் தனிமையில் இருக்கும் போதும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தக்க கண்காணிப்புகளுடன் இருப்பது தெரிந்தால் எந்த ஆணும் தவறு செய்யத் துணிய மாட்டான். ஆதாரத்துடன் தவறு செய்து மாட்டிக் கொள்ள யாருக்குத்தான் விருப்பம் இருக்கக் கூடும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டவை தான் பாலியல் வன்முறைக் குற்றங்களௌ நொடியில் காட்டிக் கொடுக்கத் தக்க வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட இந்த உள்ளாடைக் கண்டுபிடிப்புகள்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றனவே தவிர, குறைகிற வழிகளைக் காணோம். இப்படியான சூழலில் சில பாலியல் குற்றச்செயல்களின் போது குற்றவாளிகள் குற்றத்தையும் செய்து விட்டு அதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் குற்றங்களில் இருந்தும், தண்டனையில் இருந்தும் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள். குற்றவாளிகள் இப்படி தந்திரமாகத் தப்பும் நிலை இனியும் ஏற்படக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்களால் இனியும் போதுமான ஆதாரங்களைச் சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனும் எச்சரிக்கை மற்றும் பொறுப்புணர்வுடன் மணிபுரியைச் சேர்ந்த ஷீனு எனும் கல்லூரி மாணவி இப்படி ஒரு மேம்படுத்தப்பட்ட உள்ளாடையொன்றைக் கண்டறிந்து அதைப் பெண்களிடையே அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இந்த உள்ளாடை பெண்களுக்குச் சிறந்த பாதுகாப்புக் கவசமாக விளங்குவதுடன், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் சந்தர்பத்தில் அது குறித்தான தடயங்களைப் பதிவு செய்து நொடியில் காவல்துறையினருக்கோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்களுக்கோ சமிஞ்சைகளை அனுப்பக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையும், பெண்ணின் உறவினர்கள் அல்லது நண்பர்களும் உடனுக்குடனாக அப்பெண் ஆபத்தில் இருப்பதை அறிந்து உதவ முடியும். அது மட்டுமல்ல, உள்ளாடையில் பொருத்தப்படும் தொழில்நுட்பக் கருவிகளில் பிளேட் புரூஃப் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில் இத்தகைய உள்ளாடைகளை சேதப்படுத்தி ஆதாரங்களை அழிக்கவும் முடியாது. உள்ளாடையில் பொருத்தப்படும் எமர்ஜென்ஸி பட்டன் அழுத்தப்படுகையில் அது தானியங்கியாக SOS அழைப்பு வசதி முறையில் 100 க்கு டயல் செய்தி அனுப்பி விடும். அதுமட்டுமல்ல, இதில் பொருத்தப்பட்டுள்ள GPS கருவி மூலமாக பாலியல் வன்முறை நடைபெறும் இடத்தையும் காவல்துறையினர் உடனடியாக அடையாளம் காணவும் முடியும். என இதை வடிவமைத்த மாணவி ஷீனு கூறுகிறார்.

லாப நோக்கங்கள் இன்றி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு மாணவி ஷீனு இத்தகைய உள்ளாடைகளை வடிவமைத்திருக்கிறார். மேலும் ஷீனு, தனது கண்டுபிடிப்பைப் பற்றி கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சரான மேனகா காந்தியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். மேனகா காந்தி வாயிலாக இந்த கண்டுபிடிப்பு குறித்த விவரங்கள் அகமதாபாத் பேராசிரியர் அனில் குப்தாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறைய இந்த உள்ளாடைகள் நிரந்தரப் பலனளிக்கக் கூடுமா? என்பது குறித்து பேராசிரியர் தரப்பிலிருந்து பதில் கிடைப்பதற்காக தற்போது காத்திருக்கிறார் ஷீனு. அவரது கண்டுபிடிப்பு பெண்களை பாலியல் வன்முறை அச்சமின்றி சுதந்திரமாக தனித்து இயங்க உதவினால் நிச்சயம் பாராட்டத்தக்கதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com