அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

அறிவியல் ஆயிரம்: தனிம அட்டவணையில் பங்களிப்பு செய்த பிரிட்டிஷ் வேதியலாளர் ஜான் நியூலாண்ட்ஸ்!

பிரிட்டிஷ் வேதியலாளர் ஜான் அலெக்சாண்டர் ரெய்னா நியூலாண்ட்ஸ் பற்றி...

John Newlands

ஜான் நியூலாண்ட்ஸ் - Royal soceity of chemistry

Updated On :

நவம்பர் 26 - ஜான் நியூலாண்ட்ஸ் என்ற பிரிட்டிஷ்  வேதியியலாளர் பிறந்த தினம். அவரது முழுப் பெயர் ஜான் அலெக்சாண்டர் ரெய்னா நியூலாண்ட்ஸ் (John Alexander Reina Newlands). அவர் பிறந்த ஆண்டு 1837. ஜான் அலெக்சாண்டர் ரெய்னா நியூலாண்ட்ஸ், "எண்ம விதியை" (Law of Octaves) வகுத்ததற்காகவும் அணுநிறையின் அடிப்படையில் தனிமங்களைக் கொண்ட தொடக்க கால ஆவர்த்தன அமைப்பை உருவாக்கியதற்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்

இளமைக் காலம்

நியூலாண்ட்ஸ் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், சவுத்வார்க் பகுதியிலுள்ள வெஸ்ட் ஸ்கொயரர் என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவரின் பெயர் வில்லியம் நியூலாண்ட்ஸ்((William Newlands). அவர் ஒரு ஸ்காட்டிஷ் பிரஸ்பைடிரியன் (Scottish Presbyterian) மதகுருவாகப் பணியாற்றியவர். அவரது அன்னையின் பெயர் மேரி சாரா ரெய்னா (Mary Sarah Reina). இவர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

படிப்பும் பணியும்

தந்தையே அவருக்கு வீட்டிலிருந்தபடி கல்வி புகட்டினார். பின்னர் அவர் ராயல் வேதியியல் கல்லூரியில் (இன்று இம்பீரியல் கல்லூரி லண்டனின் ஒரு பகுதி) பயின்றார். சமூகச் சீர்திருத்தத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர், 1860-ஆம் ஆண்டில் இத்தாலியை ஒன்றிணைக்க கியூசெப்பே கரிபால்டி நடத்திய படையெடுப்பில் தொண்டராகப் பங்கேற்றார். பின்னர் அவர் லண்டனுக்குத் திரும்பினார். 1864-ஆம் ஆண்டில் வேதியல் தனிமங்களில் பகுப்பாய்வு செய்து, தன்னை வேதியியலாளராக அறிவித்தார். அதன்பின், அவர் 1868-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் டங்கனின் லண்டன் சர்க்கரை ஆலையில் தலைமை வேதியியலாளராகப் பொறுப்பேற்றார். அங்கு, சர்க்கரைச் சுத்திகரிப்பு முறைகளில் பல மேம்பாடுகளைப் புகுத்தினார். பிற்காலத்தில் அப்பணியிலிருந்து விலகி, தம் சகோதரர் பெஞ்சமினுடன் இணைந்து மீண்டும் பகுப்பாய்வாளராகப் பணியாற்றினார்.

தனிம அட்டவணையில் பங்களிப்பு

ஜான் நியூலாண்ட்ஸ் தனிமங்களை அவற்றின் ஒப்பு அணுநிறைகளின் வரிசையில் அடுக்கி, ஆவர்த்தன அட்டவணையை முதன்முதலில் வடிவமைத்தார். அந்த தகவல் 1863-ஆம் ஆண்டு பிப்ரவரியில் "கெமிக்கல் நியூஸ்" இதழில் வெளியானது. யோஹான் வொல்ப்காங் டெபரைனரின் மும்மைத் தனிமங்கள் பற்றிய ஆய்வையும், ழான்-பாப்டிஸ்ட் டியூமாவின் ஒத்த பண்புடைய தனிமக் குடும்பங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். பின்னர் அவர் 1865-ஆம் ஆண்டில் தம்முடைய "எண்மத் விதியை" (Law of Octaves) வெளியிட்டார். அதாவது, "ஒரு தனிமத்தின் பண்புகள், அட்டவணையில் அதைத் தொடர்ந்து வரும் எட்டாவது தனிமத்தின் பண்புகளை ஒத்திருக்கும்" என்பது அவ்விதியின் சாரம் ஆகும்.

அன்று அறியப்பட்டிருந்த எல்லாத் தனிமங்களையும், ஹைட்ரஜனில் தொடங்கி தோரியத்தில் (அணுநிறை 232) முடியும்படி, ஏழு தனிமங்கள் கொண்ட எட்டுத் தொகுதிகளாக அவர் வகுத்தார்; இசையின் சுர எண்மங்களோடு அதை ஒப்பிட்டும் உரைத்தார். அந்நாளில் அறியப்பட்டிருந்த அணுநிறைகளின்படி தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றின் வரிசையைக் காட்டும் வகையில் தொடர் எண்கள் இடப்பட்டிருந்தன. தொகுதிகள் (groups) குறுக்காகவும், அலகுகள் (periods) கீழ்நோக்கியும் அமைக்கப்பட்டிருந்தன; இது இன்றைய ஆவர்த்தன அட்டவணைக்கு நேர்மாறான அமைப்பாகும்.

அட்டவணையின் இடைவெளிகள்

அந்த ட்டவணையில் காணப்பட்ட இடைவெளிகள், இன்னும் கண்டறியப்படாத தனிமங்கள் இருக்கக் கூடும் என்பதை ஜான் நியூலாண்ட்ஸுக்கு குறிப்பால் உணர்த்தின. ஆயினும், எண்மத் விதி அவருடைய சமகாலத்தவர் சிலரால் எள்ளி நகையாடப்பட்டது; வேதியியலாளர் கழகமும் அவருடைய ஆய்வைப் பிரசுரிக்க மறுத்துவிட்டது.

ஜான் நியூலாண்ட்ஸ் 1882-ஆம் ஆண்டில் ஆவர்த்தன அட்டவணையைப் பிற்காலத்தில் "கண்டுபிடித்ததற்காக" திமித்ரி மெண்டலீவும் லோத்தார் மேயரும் ராயல் சங்கத்தின் டேவி பதக்கத்தைப் பெற்றனர். அதன் பின்னர், தம்முடைய முந்தைய ஆய்வுக்கு உரிய அங்கீகாரம் வேண்டி நியூலாண்ட்ஸ் போராடினார்; இறுதியில் 1887-ஆம் ஆண்டில் அவரும் டேவி பதக்கத்தைப் பெற்றார்.

ஆவர்த்தன விதியின் கண்டுபிடிப்பு குறித்தும், அணுநிறைகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் (1884) என்பது அவருடைய ஒரு படைப்பாகும்.

மிடில்செக்ஸ் மாகாணத்திலுள்ள லோயர் கிளாப்டனில் இருந்த தம் இல்லத்தில், அறுவைச் சிகிச்சையின் பின்விளைவுகளால் ஜான் நியூலாண்ட்ஸ், 1898 ஜூலை 29 உயிர் நீத்தார்; அவருடைய உடல் வெஸ்ட் நார்வுட் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைவுக்குப் பின், அவருடைய இளைய சகோதரர் பெஞ்சமின் அவருடைய தொழில்களைத் தொடர்ந்து நடத்தினார்.

ஜான் நியூலாண்ட்ஸ் பற்றிய சுவையான செய்திகள்

1.   "அகரவரிசையில் அடுக்கிப் பார்த்தீர்களா?"
1866-ஆம் ஆண்டு வேதியியல் கழகக் கூட்டத்தில் நியூலாண்ட்ஸ் தம் எண்ம விதியை விளக்கினார். அப்போது அவையில் இருந்த ஜார்ஜ் கேரி ஃபாஸ்டர், "தனிமங்களை அகரவரிசையில் அடுக்கிப் பார்த்தீர்களா? அதிலும் ஏதேனும் ஒழுங்கு தென்படுமே!" என்று ஏளனமாகக் கேட்டார். அவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த அவமதிப்பால் அவருடைய ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்கப்படாமல் போயிற்று என்று கூறப்படுகிறது.

2.      வேதியியலில் இசை உவமை: 1865-இல், தனிமங்களை அணுநிறை ஏறுவரிசையில் அடுக்கியபோது, ஏறத்தாழ ஒவ்வொரு எட்டாவது தனிமத்திலும் ஒத்த வேதியியல் பண்புகள் மீண்டும் தோன்றுவதை நியூலாண்ட்ஸ் கவனித்தார். இந்த அமைப்பை அவர் இசையின் சுர எண்மங்களோடு ஒப்பிட்டார். எட்டாவது தனிமம் முதல் தனிமத்தின் பண்புகளை மீண்டும் காட்டுவதை, இசையில் எட்டாவது சுரம் முதல் சுரத்தின் ஒலியையே மீண்டும் எழுப்புவதோடு அவர் ஒப்பிட்டார். வேதியியலை இசையோடு இணைத்த இந்தக் கற்பனையே அன்றைய அறிஞர்களுக்கு விளையாட்டாகத் தோன்றியது.

3.      தனிமங்களுக்கு எண் இட்டவர் தனிமங்களை அணுநிறை வரிசையில் அடுக்கி, ஒவ்வொன்றுக்கும் தொடர் எண் கொடுத்தவர் இவரே. பிற்காலத்தில் "அணுவெண்" என்ற கருத்து வளர்ந்ததற்கு இது ஓர் ஆரம்ப அடையாளமாகக் கருதப்படுகிறது.

4.      கெர்மேனியத்தை முன்கூட்டியே உணர்ந்தவர்
அட்டவணையில் இடைவெளி விட்டு, அங்கே ஒரு தனிமம் இருக்கக் கூடும் என்று அவர் குறிப்பால் உணர்த்தினார். சிலிக்கனுக்கும் டின்னுக்கும் இடையில் அணுநிறை சுமார் 73 கொண்ட தனிமம் ஒன்றை அவர் எதிர்பார்த்தார். பின்னாளில் கண்டறியப்பட்ட கெர்மேனியம் அதுவே என்று பலரும் கூறுவர். ஆனால், இந்தக் கணிப்பை அவர் மெண்டலீவ் போல் துணிவோடு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

5.      விதியின் குறை எண்ம விதி கால்சியம் வரையிலான தனிமங்களுக்கு மட்டுமே நன்றாகப் பொருந்தியது. அதன் பின் பொருந்தவில்லை. அன்று பல தனிமங்கள் கண்டறியப்படாமலும், சில அணுநிறைகள் தவறாகவும் இருந்தன. சில இடங்களில் இரண்டு தனிமங்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டியிருந்தது. இக்குறைகளே அவர் மீதான கேலிக்குக் காரணமாயின.

6.   அங்கீகாரத்திற்கான போராட்டம்: 1882-இல், பிற்காலத்திய ஆவர்த்தன அட்டவணைப் பணிக்காக திமித்ரி மெண்டலீவும் லோத்தார் மேயரும் டேவி பதக்கம் பெற்ற பின்னர், நியூலாண்ட்ஸ் தமக்கும் உரிய அங்கீகாரம் வேண்டிப் போராடினார்; 1887-இல் அவரும் டேவி பதக்கத்தை வென்றார்

7.  தாயின் பெயர் நடுப்பெயராக அவருடைய பெயரிலுள்ள "ரெய்னா" என்பது இத்தாலியத் தாயின் குடும்பப் பெயர். இத்தாலியத் தொடர்பே, இளவயதில் கரிபால்டியின் விடுதலைப் போரில் அவரை இணையச் செய்திருக்கலாம்.

8.  சர்க்கரை நிபுணர்- வேதியியல் வரலாற்றில் இடம்பெற்ற இவர் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சர்க்கரைத் தொழிலில் கழித்தார். சகோதரர் பெஞ்சமினுடன் இணைந்து சர்க்கரை உற்பத்தி, சுத்திகரிப்பு பற்றிய நூலையும் எழுதினார்.

9.  காலம் தந்த நீதி: மெண்டலீவுக்குக் கிடைத்த டேவி பதக்கம் தமக்கும் உரியது என்று நியூலாண்ட்ஸ் போராடியதால், 1887-இல் அவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆயினும் "ஆவர்த்தன அட்டவணையின் தந்தை" என்ற புகழ் மெண்டலீவுக்கே நிலைத்தது.

10. தலைகீழ் அமைப்பு: நியூலாண்ட்ஸின் அட்டவணையில், ஒத்த தனிமங்களின் தொகுதிகள் (groups) குறுக்காகவும், அலகுகள் (periods) கீழ்நோக்கியும் அமைந்தன. இது இன்றைய ஆவர்த்தன அட்டவணைக்கு நேர்மாறானது.

11. இத்தாலிய ஒருங்கிணைப்புக்காகப் போராடியவர்: சமூகச் சீர்திருத்த ஆர்வத்தால் உந்தப்பட்டு, இத்தாலியை ஒன்றிணைக்க நடந்த போரில், 1860-இல் கியூசெப்பே கரிபால்டியுடன் தொண்டராகப் பங்கேற்றார்

12.  ஏளனத்தை எதிர்கொண்டும் தம் கருத்தைக் கைவிடாத அவருடைய விடாமுயற்சி, அறிவியல் வரலாற்றின் நினைவுகூரத்தக்க பாடமாகும்.

(நவ. 26 - பிரிட்டிஷ் வேதியலாளர் ஜான் அலெக்சாண்டர் ரெய்னா நியூலாண்ட்ஸ் பிறந்த நாள்)

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

Summary

British chemist John Newlands, who contributed to the periodic table

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.