இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: 10+2 Technical Entry Scheme-2025

காலியிடங்கள்: 90

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 16 1/2 முதல் 19 1/2 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2005-க்கும் 1.7.2008-க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: 15 நிமிடத்திற்குள் 2.4 கி.மீ தூரத்தை ஓடிக்கடக்க வேண்டும். Pushups -20, situps - 20, chinups - 8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பிளஸ் 2 மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு 2024 பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும்.

நேர்முகத் தேர்வு அலகாபாத், போபால், பெங்களூரு, கபுர்தலா ஆகிய இடங்களில் நடைபெறும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு 5 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் முதலாம் ஆண்டும் அடிப்படை ராணுவப் பயிற்சியும், 3 ஆண்டுகள் ராணுவ தொழில்நுட்ப பயிற்சியும், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி ஒரு ஆண்டும் வழங்கப்படும். 5 ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியாமர்த்தப்படுவர். பயிற்சி ஜனவரி 2025 இல் தொடங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஜேஇஇ மெயின் தேர்வு-2024 மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.6.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com