தில்லியில் 3 சகோதரிகள் மர்ம மரணம்: தந்தை தலைமறைவு
தில்லியின் மாண்டேவாலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் மர்மமான முறையில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புது தில்லி: தில்லியின் மாண்டேவாலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் மர்மமான முறையில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 3 சகோதரிகளுக்கும் முறையே, இரண்டு, நான்கு மற்றும் எட்டு வயது இருக்கும். இவர்கள் நேற்று இரவு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
குழந்தைகளை அவரது தாயும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவர்கள் உடலில் எந்த காயமும் இல்லாததால் அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், அவர்களது வீட்டில் இருந்து சில மருந்து பாட்டில்களைக் கண்டெடுத்த காவல்துறையினர், குழந்தைகளின் தந்தை தலைமறைவானதை அடுத்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...