புது தில்லி: சமூகத்தில் பகைமையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில் அவர் கூறி இருந்தாவது:
இந்துக்களுக்காக உழைக்கும் கட்சி என்று தன்னை பாஜக அழைத்துக் கொள்கிறது. ஆனால் அது அரசியலுக்கான நடவடிக்கையாக உள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்காக அனைத்து இந்துக்களையும் கொல்வது குறித்து அவர்கள் இரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவினையடுத்து பாஜகவின் அஸ்வினி உபாத்யாய, சமூகத்தில் பகைமையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இருந்து, தற்போது பாஜகவில் இணைந்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது புகாரினை அடுத்து, அரவிந்த் கேஜரிவால் மீது வழக்குப் பதிவு செய்யயப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்னாமலை பேச்சு!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


