கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

ராகுல் காந்தியின் தேசப்பற்று போலியானது: பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

News image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

Updated On :12 ஜூலை 2020, 11:21 am

ANI

புது தில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேசப்பற்று போலியானது என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் பாஜக மாவட்ட அலுவலகத் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசியதாவது:

இந்தியா மற்றும் சீனா இடையே டோக்லாம் எல்லைப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த சமயத்தில் ராகுல் காந்தி இந்தியாவிற்கான சீனத்  தூதரை சந்தித்தது நாட்டிற்கே தெரியும். அதிலும் அதனை வெளியே கூறாமல் ராகுல் தேசத்தை தவறாக வழிநடத்தினார். சீனத் தூதர் ராகுலுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த பிறகே அது அனைவருக்கும் தெரிய வந்தது. எனவே தேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போலியானது. பாதுகாப்புத் துறை தொடர்பான 11 கூட்டங்களை நீங்கள் புறக்கணித்துள்ளீர்கள். இதுதான் ஒரு நாட்டை நடத்தும் முறையா?

இவ்வாறு பேசிய அவர் தேசத்தை வலுப்படுத்துவதற்காக பாஜகவில் இணையும்படி மற்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.