
தாஜ்மகாலில் இரவு நேரப் பார்வையாளர்களுக்கு அனுமதி
கரோனா பரவல் காரணமாக தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவுநேர பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓர் ஆண்டு காலமாக தாஜ்மகாலில் இரவு நேரப் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (ஆகஸ்ட் 21) முதல் இரவு நேரப் பார்வைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதையும் படிக்க | ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மூன்று தவணையாக தலா 50 பேருக்கு மிகாமல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. தாஜ்மகாலில் இரவு நேரப் பார்வைக்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...