பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஹிந்துக்களே வீட்டில் ஆயுதங்களோடு இருங்கள்! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை

தங்களைத் தாக்குபவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவும், தங்களின் கண்ணியத்தைக் காத்துக்கொள்ளவும் ஹிந்துக்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ள வேண்டும்: பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர்

News image

பிரக்யா தாக்குர்

Updated On :26 டிசம்பர் 2022, 7:48 pm IST


தங்களைத் தாக்குபவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவும், தங்களின் கண்ணியத்தைக் காத்துக்கொள்ளவும் ஹிந்துக்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார். 

தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை ஹிந்துக்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இது தொடர்பாக பேசிய அவர், உங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம், காய்கறிகளை வெட்டும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களையாவது வைத்துக்கொள்ளுங்கள். எதுபோன்ற இக்கட்டான சூழல் உருவாகும் என்று கூற முடியாது. தங்களைக் காத்துக்கொள்ளும் உரிமை அனைவருக்கும் உள்ளது. யாரேனும் நமது வீடுகளில் புகுந்து தாக்க முற்பட்டால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

மேலும், லவ் ஜிகாத் குறித்து பேசிய பிரக்யா, ஜிகாத் செய்யும் பாரம்பரியம் அவர்களுடையது (முஸ்லீம்). காதலித்தாலும் ஜிகாத் செய்கின்றனர். நாமும் காதலிக்கிறோம். நாம் கடவுளை காதலிக்கிறோம். துறவிகள் கடவுளை காதல் கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.