இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டிற்கு சென்றுள்ள ஜெய்சங்கர் மார்ச் 30 ஆம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
இதையும் படிக்க.. எரியும் இலங்கை: மகிந்த ராஜபட்ச அரசின் வீழ்ச்சி; நேரடி ரிப்போர்ட்-3
இதனிடையே, இன்று காலை இலங்கை நிதியமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர், பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியா அளிக்கவுள்ள உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் அமைந்துள்ளது.
இதையும் படிக்க.. எரியும் இலங்கை: என்ன நடக்கிறது? நேரடி ரிப்போர்ட் - 1
தொடர்ந்து, மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பின் பேரில் வாரக் கடைசியில் மாலத்தீவிலுள்ள அட்டுவிற்கு ஜெய்சங்கர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!

நாளைய ராசி பலன்கள் (04.08.2026) 12 ராசிகளுக்கும்! அதிர்ஷ்டத்தை அள்ளப்போவது யார்?

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட்டின் சுதந்திர தின சலுகைகள்!

ஏகே - 64 பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தயாரிப்பாளர் இவரா?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



