கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

புதிய நாடாளுமன்ற கட்டடம்: மக்களிடம் பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 மே 2023, 1:08 pm

DIN

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்த அவர், மக்கள் அனைவரும் எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை தங்கள் குரல் பதிவோடு பகிருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்யும். இந்த விடியோ புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பான அமைப்பை காட்டும் விதமாக பகிரப்பட்டுள்ளது. நான் உங்களிடத்தில் ஒரு சிறப்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை உங்களது சொந்த குரலில் உங்கள் எண்ணங்களை, கருத்துகளை பதிவு செய்து பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நீங்கள் பகிரும் விடியோக்களில் சிலவற்றை நான் ரீ-ட்விட் செய்வேன். எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்த மறந்துவிட வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.

நாளை மறுநாள் (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.