வேலைவாய்ப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணாத வரை..: அகிலேஷ் யாதவ் விமர்சனம்
மத்திய பட்ஜெட் குறித்து அகிலேஷ் யாதவ் விமர்சனம்.


இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு காணாத வரை பட்ஜெட்டால் பயனில்லை என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து சமாஜவாதி தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“அரசை காப்பாற்றுவதற்காக மத்திய பட்ஜெட்டில் பிகார், ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலையின்மை அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டதாக பாஜக தலைவர்கள் கூறிய திட்டங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இளைஞர்களுக்காக பாஜக என்ன செய்துள்ளது?
விவசாயிகளுக்கான வருமானமும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்னைகளுக்கும் தீர்வு காணாத வரை பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:
“வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், உணவுப் பொருள்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி அரசின் செலவு குறைந்துள்ளது.
பொருளாதாரம் சுருங்கும்போது மக்களின் பிரச்சனை அதிகரிக்கும். மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பை பெருக்க பொருளாதார செயல்பாடு அதிகரிக்க வேண்டும். முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், வேலை வாய்ப்புகளை அதிகரிக்காது.” என்று விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...