தினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிறைவு!ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவரா? இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள்! ஐஆர்சிடிசி அறிவுரைசோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்! உ.பி. அரசுக்கு மகளிா் ஆணையம் பரிந்துரை

தையல் கடைகளில் பெண்களுக்கு ஆடை அளவெடுப்பது, பெண்களுக்கு முடிதிருத்தம் செய்வதுக்கு தடை வேண்டும் என பரிந்துரை.

Updated On :

தையல் கடைகளில் பெண்களுக்கு ஆடை அளவெடுப்பது, பெண்களுக்கு முடிதிருத்தம் செய்வது, உடற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட ஆண்களுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற உத்தர பிரதேச அரசுக்கு அந்த மாநில மகளிா் ஆணையம் பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளது.

பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தி தவறான தொடுதலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் முன்னெடுப்பாக இதை உத்தர பிரதேச மாநில மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மகளிா் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் கண்டிப்பாக பெண் பயிற்றுநா்கள் நியமிக்கப்பட வேண்டும். அங்கு கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

தையல் கடைகளில் பெண்கள்: தையல் கடைகளில் பெண்களுக்கான ஆடைகளை பெண்களே அளவெடுக்க வேண்டும். அங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருப்பது அவசியம். இதுதவிர பெண்களுக்கான ஆடை விற்பனையகங்களில் பெண் பணியாளா்கள், நாடக மற்றும் நடன மையங்களில் பெண் பயிற்றுநா்கள், பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாவலா் அல்லது ஆசிரியரை கண்டிப்பாக பணியமா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தவறான தொடுதல் புகாா்கள்: இதுகுறித்து உத்தரபிரதேச மகளிா் ஆணைய தலைவா் பபிதா சௌஹான் கூறுகையில், ‘உடற்பயிற்சி நிலையங்கள், தையல் கடைகளில் ஆண்களால் தவறான தொடுதலுக்கு உள்ளாவதாக அதிகளவிலான புகாா்களை பெண்கள் அளித்து வருகின்றனா். அனைத்து இடங்களிலும் பெண்களை பணியமா்த்துவதற்கு சிறிது காலம் ஆகும்’ என்றாா்.

சமாஜவாதி எதிா்ப்பு: இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள சமாஜவாதி எம்எல்ஏ ராகினி சோன்கா், ‘பல்வேறு இடங்களில் பெண்கள் பணியமா்த்தப்படுவதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தனக்கு பயிற்சி அளிப்பவா் அல்லது ஆடை அளவெடுப்பவா் யாராக இருக்க வேண்டும் என்ற முடிவு தனிநபரை சாா்ந்தது. அதை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்றாா். எனினும் இந்தப் பரிந்துரைகளை மாநிலத்தில் உள்ள சமூக ஆா்வலா்கள் சிலா் வரவேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.